ஷார்ஜா: உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக இருக்கிறது துபாய். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் இங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் எனப்படும் வாழ்க்கை செலவினங்களும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளன. இதனால் பெரும்பாலான இந்தியர்கள் துபாயை விட்டு ஷார்ஜாவை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட 7000 ஆண்டுகள் பழமையான நகரம் தான் ஷார்ஜா, துபாய்க்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரத்தில் தான் தற்போது பெரும்பாலான இந்தியர்கள் தங்களுடைய முதலீடுகளை குவிக்க தொடங்கியுள்ளனர். அது மட்டும் இன்றி இங்கே பணியாற்றும் பல ஊழியர்களும் இந்தியர்களும் துபாயில் இருந்து ஷார்ஜாவுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஷார்ஜாவில் வெளிநாட்டவர்கள் சொந்தமாக இடம் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டன. இதனை அடுத்து பெரும்பாலான வெளிநாட்டவர்களின் கவனம் தற்போது ஷார்ஜாவில் இருப்பது.
குறிப்பாக இந்தியாவை சேர்ந்த முதலீட்டாளர்களும் சார்ஜாவை நோக்கி தான் அதிகமான முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிப் பணி, வழக்கறிஞர்கள் பணி மற்றும் பிற ஒயிட் காலர் பணிகளுக்காக ஏராளமானவர்கள் துபாய் நோக்கி செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கான வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவது துபாய்க்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. தேவை அதிகரித்ததன் காரணமாக துபாயில் வீட்டு வாடகை மற்றும் வீடுகளின் மதிப்பும் வேகமாக அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் துபாயில் வீட்டு வாடகைகளின் மதிப்பு 86 சதவீதம் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து 16 காலாண்டுகளாக துபாயில் வீடுகளின் மதிப்பும் வாடகைகள் மதிப்பும் உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
எனவே தான் ஏராளமானவர்கள் ஷார்ஜாவை நோக்கி செல்ல விரும்புகிறார்களாம். கிட்டத்தட்ட துபாயில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகள் ஷார்ஜாவிலும் கிடைக்கின்றன. ஆனால் துபாயுடன் ஒப்பிடும்போது அங்கே செலவுகள் குறைவாக இருக்கின்றன. எனவே அங்கே செல்வது தான் உகந்தது என அண்மையில் ஷார்ஜாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக துபாய் துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஷார்ஜாவில் இடங்களை வாங்கி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்ய தொடங்கியுள்ளன.
குறிப்பாக சவுதி அரேபியாவின் இளவரசருக்கு சொந்தமான அராடா ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது ஷார்ஜாவில் மிகப்பெரிய அளவிலான ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இந்த குடியிருப்பில் வீடுகளை வாங்கியவர்களில் 29 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆகும்.
இது கடந்தாண்டை விட 8.7 சதவீதம் அதிகம். தற்போது துபாய் விமான நிலையத்திற்கு அருகிலேயே அராடா ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. துபாய் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்திலேயே இங்கு சென்று விட முடியும்.
கட்டுமான பணி தொடங்கிய போது ஒரு சதுர அடியின் விலை 650 திராமங்களாக இருந்து தற்போது 1400 திராம்கள் என உயர்ந்துள்ளது. இதுவே இங்கே வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. துபாயை விட ஷார்ஜாவில் 30 சதவீதம் செலவினங்கள் குறைவாக இருப்பதால் பலரது விருப்பமான தேர்வாக இது மாறியுள்ளது. தற்போது 20 லட்சம் பேர் ஷார்ஜாவில் வசிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications