2023-ஆம் ஆண்டு தங்கள் செலவினங்களில் 29 சதவீதத்தை விருப்பச் செலவுகளுக்காக செலவு செய்துள்ளனர். பெர்ஃபியோஸ் மற்றும் பிடபிள்யூசி இந்தியாவின் ஆய்வு ஆன்லைன் கேம் மற்றும் உணவு டெலிவரி போன்ற துறைகளில் மக்கள் எவ்வாறு செலவு செய்கின்றனர் என்பதை ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக வருமானம் மற்றும் அவர்கள் இருக்கும் நகரத்தின் அமைப்புகள் போன்ற காரணிகள் செலவு முறைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 30 லட்சத்திற்கும் அதிகமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
விருப்பம் மற்றும் தேவை ஆகிய இரண்டிற்கும் இடையில் தங்கள் விருப்பத்திற்காக மக்கள் 29 சதவீதத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர். வாடகை, கரண்ட் பில் போன்ற அத்தியாவசிய செலவுகளைத் தவிர்க்க முடியாது. ஆகையால் இவை தேவை என்பதன் கீழ் வரும். விருப்பம் என்பது வெளியில் சாப்பிடுவது, பொழுதுபோக்குக்காக செலவு செய்வது போன்ற பிற விருப்பச் செலவுகளை குறிக்கும்.

EMI தொகை உட்பட கட்டாயம் செலுத்த வேண்டிய செலவுகளுக்காக மக்கள் 39 சதவீதம் செலவு செய்துள்ளனர். அதாவது தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியைத் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்துகின்றனர். மளிகை பொருட்கள், மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்காக 32 சதவீதம் செலவு செய்கின்றனர். அதோடு இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 73 சதவீதத்தினர் மாத வருமானமாக 40,000 ரூபாய் பெறுபவர்கள்.
அதோடு நுகர்வோர் தங்கள் விருப்பச் செலவுகளில் ஆடைகள், புதிய மொபைல், தொலைக்காட்சி போன்ற பொருட்களை வாங்குவதற்கு அதிகம் செலவு செய்துள்ளனர். 63 சதவீதம் வரை தங்கள் வருமானத்தில் இதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மக்கள் 13.7 சதவீதம் செலவு செய்துள்ளனர். வெளியில் சாப்பிடுவதற்கும், உணவு ஆர்டர் செய்வதற்காகவும் 13.1 சதவீதத்தையும், மதுபானங்கள் மற்றும் இதர விஷயங்களை செய்வதற்காக 2.7 சதவீதத்தையும், பயணம் செய்ய 1.2 சதவீதத்தையும் பயன்படுத்தியுள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதோடு ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்காக மக்கள் செலவு செய்த 13.7 சதவீதத்தில் 22 சதவீதம் பேர் மாதத்திற்கு ரூ. 20,000 வரை சம்பாதிப்பதாகவும், 18 சதவீதம் பேர் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல வெவ்வேறு நகரங்களின் அடிப்படையிலும் செலவு முறைகள் மாறுபடுகின்றன. டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆன்லைன் கேமிங்கில் மாதத்திற்கு சராசரியாக ரூ. 5000 வரை செலவு செய்கின்றனர். ஆக்ரா, ராஞ்சி மற்றும் ராஜ்கோட் போன்ற டயர் 2 நகரங்களில் வசிப்பவர்கள் 6% குறைவாக 4763 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
என்ட்ரி லெவலில் பணிபுரியும் ஊழியர்கள் மாதத்திற்கு 492 ரூபாய் வரை உணவு ஆர்டர் செய்ய செலவு செய்கின்றனர். அதேபோல அதிக வருமானம் பெறுபவர்கள் மாதத்திற்கு 2170 ரூபாய் வரை உணவு ஆர்டர் செய்ய செலவு செய்கின்றனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!



Click it and Unblock the Notifications