அண்மையில் எந்த ஆவணமும் இன்றி முறைகேடாக அமெரிக்காவில் தங்கியிருந்த நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமான மூலமாகவே இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக உயிரை பணயம் வைத்து இவ்வாறு பலரும் ஏன் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
பொதுவாக இவ்வாறு அமெரிக்க அரசால் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் பலரும் இந்தியாவிலிருந்து மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கிருந்து எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். இவர்களை பிடித்து வைத்து அமெரிக்க அரசாங்கம் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இன்னும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இந்தியா அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும் குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் இவ்வாறு அமெரிக்காவிற்கு முறைகேடாக செல்ல முயற்சிப்பது தெரிய வருகிறது. இதற்கு வேலை வாய்ப்பின்மை ஒரு காரணமாக கூறப்படுகிறது.1991ஆம் ஆண்டு இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது.
இதனை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு துறைகளும் வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்புகளும் வளர்ந்து வருகின்றன. இருந்தாலும் சில பகுதிகளில் மக்கள் வேலைவாய்ப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அது இன்னும் பெரிதாகிவிட்டது. எனவே தான் எப்படியாவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வேலை பெற்றுவிட வேண்டும் என பலர் எண்ணுகிறார்களாம்.
அமெரிக்காவில் நல்ல வேலை வாய்ப்பும் சிறந்த வாழ்க்கை தரமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுமே இவ்வாறு உயிரை பணயம் வைத்து வெளிநாட்டுக்கு செல்ல காரணமாக கூறப்படுகிறது.
அண்மையில் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஒரு குஜராத் குடும்பம் 1 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்ததாக கூறி இருந்ததை நாம் நினைவு கூற வேண்டும். சில இந்திய மாநிலங்களில் குறைவான ஜிடிபி, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் பல்வேறு இளைஞர்களும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அப்படியே இந்தியாவில் வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அதிகமான நேரம் வேலை செய்ய வேண்டும் என நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதும் காரணமாகும். லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சுரண்டலுக்கு ஆளாவதாக எண்ணுகின்றனர். இதுவும் அவர்கள் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய விரும்ப காரணம்.
வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலை செய்யும் பலரும் தங்கள் வேலைக்கு உரிய சம்பளம் பெறவில்லை என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் இளைஞர்கள் சில போலி முகவர்கள் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகின்றனர்.
அமெரிக்காவில் இதே வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கும் ஆடம்பரமான வாழ்க்கை வாழலாம் என இளைஞர்களிடம் பேராசை காட்டி அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இப்படி பலரும் லட்சக்கணக்கான பணத்தை கொடுத்துவிட்டு அலைந்து திரிந்து அமெரிக்கா சென்றால் அங்கே வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை, இல்லையெனில் கைது செய்யப்படுகின்றனர், இறுதியாக தாயகமே திரும்பி விடுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications