சென்னை: ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற சர்வதேச முதலீட்டு குடிபெயர்வு ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு சுமார் 4,300 பணக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு, குறிப்பாக துபாய்க்கு செல்ல விரும்புகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. ஏன் இந்த இந்தியர்கள் துபாய் செல்ல விரும்புகின்றனர் என்ற காரணத்தை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
இந்தியாவின் பணக்காரர்கள் வேறொரு நாட்டிற்கு குடிபெயரத் திட்டமிடும்போது, அவர்களில் பெரும்பாலோர் UAE செல்ல தேர்வு செய்கிறார்கள். சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்-இன் அறிக்கையின்படி, இந்த ஆண்டு சுமார் 4,300 மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் UAE-க்குச் செல்கின்றனர்.

ஏன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்திய பணக்காரர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது?: ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற மற்ற பிரபலமான இடங்களை விட UAE இந்தியாவின் பணக்காரர்களுக்கு ஒரு பெரிய ஈர்ப்பாக உள்ளது.
துபாய் சந்தை கடந்த ஆண்டு இந்தியர்களுக்கான வீடு விற்பனை மூலம் 16 பில்லியன் திர்ஹாம்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ 35,500 கோடி சம்பாதித்தது. இது 2021-ஆம் ஆண்டில் 9 பில்லியன் திர்ஹாம்களை ஈட்டியதை விட இரு மடங்கு அதிகம். அதில் 40% வீடு வாங்குபவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பெரும்பான்மையானவர்கள் டெல்லி-NCR, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவ 40% பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்கள், மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள உலகளாவிய இந்தியர்கள் 20% பேர்.
வெளிநாட்டு குடும்ப அலுவலகங்களை (FO) நிறுவுவதற்காக துபாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் போன்ற நகரங்களை தேர்வு செய்யும் போக்கு பணக்கார இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்பிய அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து வணிகத்தில் இணைந்த இளைய தலைமுறையினர் தான். தங்கள் குடும்ப செல்வத்தை நிர்வகிக்க வெளிநாட்டு அதிகார வரம்புகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.
பல ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்களும் தங்கள் நிறுவனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றி, குடும்ப அலுவலகங்களை அங்கு திறக்கின்றனர். அவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல பல காரணங்கள் உள்ளன. ஒன்று, அவர்கள் இந்தியாவில் உள்ள வரி தொடர்பான பொறுப்புகளில் இருந்து தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை பாதுகாக்க விரும்பலாம். இரண்டு, ஒரு வெளிநாட்டு குடும்ப அலுவலகம் வெளிநாட்டு சந்தைகளையும் மற்ற வணிகத்தையும் வளர்க்க உதவுகிறது. மூன்று, இது முதலீடுகள் மற்றும் வணிகங்களின் பல்வகைப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. பொதுவாக, குடும்ப அலுவலகம் என்பது ஒரு தனியார் நிறுவனமாகும், இது சுமார் $100 மில்லியன் (சுமார் $820 கோடி) மதிப்புள்ள முதலீடு செய்யக்கூடிய சொத்துகளைக் கொண்ட குடும்பத்திற்கான முதலீடுகளையும் செல்வத்தையும் நிர்வகிக்கிறது.
காஸ்மோபாலிட்டன் கலாச்சாரம், நல்ல குடியுரிமை வசதிகள், உயர்தர உள்கட்டமைப்பு, உயர்தர வாழ்க்கை முறை, தரமான கல்வி, ஷாப்பிங், உலகத்தரம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்கள் ஆகியவை இருப்பதனால் UAE பணக்காரர்களுக்கான ஏற்ற இடமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
வணிகத்தை அமைப்பதில் எளிமை, தனிநபர் வருமான வரி மீதான முழுமையான விலக்கு மற்றும் நட்பு சூழல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவின் பல தொழில்நுட்ப தொழில்முனைவோர் நாட்டின் கோல்டன் விசா திட்டத்தைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
துபாயில் உள்ள ஸ்டார்ட்அப் சமூகத்தில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர். தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகள் வரை நாட்டில் வசிக்க அனுமதிக்கும் 100,000 கோல்டன் விசாக்களையும் வழங்குகிறது. இதுவும் பணக்கார இந்தியர்கள் அங்கு சென்று குடிபெயர்வதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!



Click it and Unblock the Notifications