நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தலை டிசம்பர் காலாண்டில் குறைத்துள்ளன.
ஏன் இந்தளவுக்கு சரிவினை கண்டுள்ளது? இனியாவது இந்த விகிதம் அதிகரிக்குமா? ஐடி ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச் சி எல் டெக் நிறுவனங்கள் பணியமர்த்தலை குறைத்துள்ளன.
டிசிஎஸ் பணியமர்த்தல்
தரவின் படி நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையில் பார்க்கும்போது நிறுவனங்கள் அனைத்துமே பணியமர்த்தலை குறைத்துள்ளன.
முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், மூன்றாவது காலாண்டில் 7000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 9840 பேரை பணியமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் & ஹெச்சிஎல் டெக்
இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 6000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியது. இதே இரண்டாவது காலாண்டில் 10,032 பேரை பணியமர்த்தியது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 5892 பேரை பணியமர்த்தியுள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 2500 பேரை பணியமர்த்தியது.
பெஞ்ச் அளவு
ஐடி நிறுவனத்தில் பெஞ்ச் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாகவே வைத்துள்ளன. இந்த விகிதத்தினை நிறுவனங்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. முந்தைய சில காலாண்டுகளாகவே தேவையானது அதிகளவில் இருந்த நிலையில், ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பெஞ்ச் ஊழியர்களை அதிகளவில் பராமரித்தன.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய், டிசம்பர் காலாண்டில் நிறுவனம் 81.7 ஊழியர்களின் மிகக் குறைந்த பயன்பாட்டு விகிதத்தினை கொண்டிருந்தது. கணிசமான ஊழியர்கள் பெஞ்ச் ஊழியர்களாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
தக்கவைப்பு விகிதம்
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது நிறுவனங்களின் தக்கவைப்பு விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதே லேட்டரல் பணியமர்த்தலானது குறைந்துள்ளது.
அட்ரிஷன் விகிதம்
முன்னணி ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது கணிசமான குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 21.3% ஆகவும், இங்கு செப்டம்பர் காலாண்டில் 21.5% ஆகவும் இருந்தது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 24.3% ஆகவும் குறைந்துள்ளது. இதே இரண்டாவது காலாண்டில் 27.1% ஆகவும் இருந்தது. இதே ஹெச் சி எல் டெக் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 21.7% ஆகவும், முந்தைய காலாண்டில் 23.8% ஆகவும் உள்ளது.
பணியமர்த்தல் குறைப்பு
முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது பணியமர்த்தலானது குறைந்துள்ளது. இது சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஐடி துறையில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கோண்டு பணியமர்த்தலை குறைக்க வழிவகுத்துள்ளது. பல நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இனியாவது அதிகரிக்குமா?
தொடர்ந்து குறைந்துள்ள பணியமர்த்தல் விகிதமானது இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்ககின்றனர். இது தற்போதைக்கு தேவையானது சரிவில் காணப்பட்டாலும் தொடர்ந்து டிஜிட்டல் மாற்றம் மற்றும் கிளவுட் சேவையில் மாற்றம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நீண்டகால நோக்கில் தேவையானது அதிகரிக்கலாம். இது பணியமர்த்தலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications