இந்தியாவில் மக்களை தேடி உணவு மற்றும் மளிகை பொருட்களை கொண்டு சேர்க்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. முதலில் உணவுகளை ஆர்டர் செய்தால் ஸ்விக்கி , ஸோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் நம் வீட்டிற்கே அவற்றை டெலிவரி செய்துவிடும். பின்னர் மளிகை பொருட்களும் டெலிவரி செய்யப்பட தொடங்கின.
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட நாம் ஆர்டர் செய்து 10 நிமிடங்களுக்குள் பெற முடிகிறது. பிளிங்கிட், செப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்றவை இந்த பிரிவில் சேவையாற்றுகின்றன. இந்தியாவில் உணவு குயிக்காமர்ஸ் பிரிவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. உணவு டெலிவரி நிறுவனமாக தொடங்கப்பட்ட ஸ்விக்கி, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் குயிக் காமர்ஸ் சேவையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஸ்விக்கி நிறுவனத்தின் கிராஸ் ஆர்டர் வேல்யூ என்பது வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு 100 ரூபாய் ஆர்டருக்கும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 18 ரூபாய் நஷ்டம் அடைகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நிறுவனத்தின் பங்கு மதிப்பிலும் எதிரொலித்திருக்கிறது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இன்ஸ்டாமார்ட் பெறும் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. ஆனால் அதன் மூலம் இன்ஸ்டாமார்டிற்கு எந்த ஒரு லாபமும் கிடைக்கவில்லை என்பதுதான் இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதாவது கிராஸ் ஆர்டர் வேல்யூ 4670 கோடி ரூபாயாக இருக்கிறது இது இதில் 840 கோடி ரூபாய் நஷ்டம் ஆகும். முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது 307 கோடி முந்தைய காலாண்டில் 578 கோடி ரூபாயாகவும் இருந்தது.
பிளிங்கிட், செப்டோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் கடுமையாக போட்டியிடக்கூடிய சூழல் இருப்பதால் இன்ஸ்டாமார்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நஷ்டத்தில் தான் தற்போது இயங்கி வருகிறது. எனவே ஸ்விக்கியில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இது நல்ல செய்தியாக அமையவில்லை. இதனால் கிடைத்த லாபத்திற்கு பங்குகளை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் பங்கு மதிப்புகள் படிப்படியாக குறைந்த வண்ணம் இருக்கின்றன.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்விக்கி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 617 ரூபாயாக இருந்தது. அதுதான் இந்த நிறுவன பங்கின் அதிகபட்ச மதிப்பாக இருந்தது. அது தற்போது 49 சதவீதம் குறைந்தது. ஐபிஓ வெளியீட்டின் போது கூட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 390 ரூபாயாக இருந்தது ஆனால் தற்போது அதிலிருந்தும் 19 சதவீதம் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
மே 22 ஆம் தேதி நிலவரத்தின்படி ஸ்விக்கி நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 315 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 25 சதவீதம் சரிவை கண்டிருக்கிறது. ஸ்விக்கியின் பங்கு மதிப்பு 385 ரூபாய் வரை எட்டும் என இதற்கு முன்பு கணிப்பு வெளியிட்டிருந்த ஹெச்எஸ்பிசி நிறுவனம் அதனை தற்போது 350 ரூபாய் என குறைத்து இருக்கிறது.
பிளிங்கிட் அதன் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 2 ரூபாயை நஷ்டமாக அடைகிறது என்றால் ஸ்விக்கி 18 ரூபாயை நஷ்டமாக அடைகிறது என ஹெச்எஸ்பிசி நிறுவனத்தின் பிரதிக் மகேஸ்வரி தெரிவிக்கிறார். இந்தியாவில் குயிக்காமர்ஸ் என வரும்போது செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் ஆகிய நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதில் தற்போது பங்குச்சந்தையில் இருப்பது இன்ஸ்டாமார்ட்டின் உரிமையாளரான ஸ்விக்கி அதே போல பிளிங்கிட்டின் உரிமையாளராக இருக்கும் எட்டெர்னல் இதற்கு முன்பு ஸோமேட்டோ என அழைக்கப்பட்ட இந்த நிறுவனமும் பங்குச் சந்தையில் இருக்கிறது. இதில் ஸ்விக்கி தான் பங்குச்சந்தையில் அதிக அடி வாங்கிய நிறுவனமாக இருக்கிறது. ஜெஃப்ரீஸ் நிறுவனம் ஸ்விக்கியின் பங்கு மதிப்பு 400 ரூபாய் எட்டும் என கணித்திருந்த நிலையில் அதனை 380 என குறைத்திருக்கிறது. பிஓஎஃப்ஏ என்ற நிறுவனம் ஸ்விக்கியின் பங்கு 295 ரூபாயாக குறையும் என கணித்திருக்கிறது.
இன்ஸ்டாமார்ட் தன்னுடைய சேவையை பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்கிறது, இந்தாலும் அதன் நஷ்டம் என்பது குறையவே இல்லை என்பதே இந்த பங்குச்சந்தை தரகு நிறுவனங்களின் வாதமாக இருக்கிறது. அது தவிர ஸ்விக்கி நிறுவனம் போட்டியை சமாளிப்பதற்காக பல இடங்களில் இன்ஸ்டாமார்டுக்கென கூடுதலாக கிடங்குகளை திறந்து வருகிறது. அதாவது அதன் செயல்பாட்டு செலவினத்தை அதிகரித்துள்ளது.
பல்வேறு பிரிவுகளில் ஒப்பிட்டு பார்த்தாலும் பிளிங்கிட்டிடுன் ஒப்பிடும்போது இன்ஸ்டாமார்ட் பின்னடைவில் தான் இருக்கிறது என மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவிக்கிறது. ஸ்விக்கி இன்ஸ்டார்மார்ட்டின் ஒரு கிடங்கிற்கான கிராஸ் ஆர்டர் வேல்யூ என்பது பிளிங்கிட்டை விட 37 சதவீதம் குறைவாக இருக்கிறது, ஒரு கிடங்கிற்கான தினசரி ஆர்டர்களின் எண்ணிக்கையும் 20% குறைவாக இருக்கிறது என தெரிவிக்கிறது.
இதன் காரணமாகவே பிளிங்கிட்டை விட இன்ஸ்டாமார்ட் குயிக் காமர்ஸ் சேவையில் நஷ்டத்தில் இருப்பதாகவும் இதனால் முதலீட்டாளர்கள் பலரும் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழப்பதாகவும் தெரிவிக்கிறது. எனவே சில காலத்திற்கு ஸ்விக்கி நஷ்டத்தில் இயங்கக்கூடிய நிறுவனமாகவே இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால் ஸ்விக்கியோ தங்கள் நிறுவனத்தின் மோசமான காலம் முடிவடைந்து விட்டது இனி வளர்ச்சி பாதையில் தான் இருப்போம் என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. மொத்தம் 26 பங்குச்சந்தை ஆய்வாளர்களில் 13 பேர் ஸ்விக்கி நிறுவன பங்கினை வாங்கலாம் என்றும் மூன்று பேர் ஏற்கனவே இருக்கும் பங்கினை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஐந்து பேர் ஸ்விக்கி நிறுவன பங்கினை விற்பனை செய்து விடுங்கள் என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.
குயிக் காமர்ஸ் கடும் போட்டி நிறைந்த ஒரு சந்தையாக மாறி வருகிறது. தற்போதைக்கு ஸ்விக்கி நிறுவனம் சந்தையை பிடிக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறது தவிர லாபத்தில் கவனம் செலுத்தவில்லை என சில பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் போட்டியாளராக இருக்கும் பிளிங்கிட் ஸோமேட்டோவுக்கு சொந்தமானதாக இருக்கிறது. பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தை பொருத்தவரை இதன் ஒரு பங்கு மதிப்பு 229 ரூபாயாக இருக்கிறது இந்த நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் 21% லாபத்தை தந்திருக்கிறது. ஸ்விக்கி தன்னுடைய இன்ஸ்டாமார்ட் சேவையை லாபமானதாக மாற்றினால் மட்டுமே தன்னுடைய முதலீட்டாளர்களை அதனால் தக்க வைத்து கொள்ள முடியும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications