ரிலையன்ஸ் ஜியோ. ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் கம்பெனி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி. ரிலையன்ஸை இன்னும் சில தசாப்தங்களுக்கு உலக வியாபார சாம்ராஜ்யங்களில் ஒன்றாக தூக்கி நிறுத்தக் கூடிய எதிர் கால வியாபாரம்.
கடந்த செப்டம்பர் 2016-ல் இருந்து இந்தியாவில்வியாபாரம் செய்யத் தொடங்கியது ஜியோ. ஆரம்பித்து நான்கு வருடங்கள் கூட இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள் இந்தியாவில் சுமாராக 30 சதவிகித வாடிக்கையாளர்களை இழுத்துவிட்டது ஜியோ.
எல்லாவற்றுக்கும் காரணம் ரிலையன்ஸ் ஜியோ அள்ளிக் கொடுத்த சலுகைகள் மற்றும் இலவசங்கள் தான். நினைவிருக்கிறதா..? இலவச டேட்டா, வாய்ஸ் கால் எல்லாம்.
ஏன் பங்கு விற்பனை
நமக்கு ஜியோ, இலவசமாக டேட்டா & வாய்ஸ் கால் போன்றவைகளை அள்ளிக் கொடுக்க அவர்களுக்கு செலவு ஆகி இருக்காதா என்ன..? அந்த செலவுகளை எல்லாம் கடன் வாங்கித் தான் செய்தது. அந்த கடன்களை அடைக்க ரிலையன்ஸ் ஜியோ இப்போது, தன் ஒரு பகுதி பங்குகளை விற்று பணத்தை திரட்டிக் கொண்டு இருக்கிறது.
ஏன் ரிலையன்ஸ் ஜியோ பங்கை வாங்குகிறார்கள்
முதல் விஷயம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனி. வர்த்தகம், தொழில், பங்குச் சந்தை என எப்படி எடுத்துப் பார்த்தாலும், ரிலையன்ஸ் நம்பர் 1 கம்பெனி. நம்பர் 1 கம்பெனி, உலகின் மிகப் பெரிய டெலிகாம் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் களம் இறங்கி ஒரு சில ஆண்டுகளில் அதிக வாடிக்கையாளர்களைப் பிடித்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறது.
ஏன் ரிலையன்ஸ் ஜியோ பங்கை வாங்குகிறார்கள் 1
சுருக்கமாக ஜியோ தான் இந்திய டெலிகாம் துறையின் தந்தை இடத்துக்கு வளர்ந்துவிட்டது. அதோடு இந்த குறைந்த காலத்திலேயே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், டெலிகாம் வியாபாரம் வழியாகவே கணிசமாக லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் ஜியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட இருக்கிறது.
ஏன் ரிலையன்ஸ் ஜியோ பங்கை வாங்குகிறார்கள் 2
இப்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்பே லாபம் பார்க்கும் கம்பெனியில் யார் தான் முதலீடு செய்யாமல் இருப்பார்கள். பற்றாக்குறைக்கு, ஃபேஸ்புக்கே சுமாராக 9.9 % பங்குகளை ரிலையன்ஸ் ஜியோவில் வாங்கியது, மற்ற முதலீட்டாளர்களையும் வாங்க வைத்திருக்கும் தானே. அது தான் சந்தையில் நடந்து கொண்டு இருக்கிறது. ஆகையால் தான் ஜியோ தன் பங்குகளை விற்றுக் கொண்டே இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications