ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய ஐபோன் 16 வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் 16 வரிசையில் 4 மாடல்கள் அறிமுகமாக இருப்பதாக தெரிகிறது, ஐபோன் 16 (Iphone 16), ஐபோன் 16 ப்ளஸ்(iphone 16 plus), ஐபோன் 16 ப்ரோ (iphone 16 pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iphone 16 pro max) ஆகிய நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பொதுவாக ஐபோன் 12 முதல் ஐபோன் 15 வரை ஒவ்வொரு மாடல் அறிமுகமாகும் போதும் அதன் விலை என்பது முந்தைய போனை 800 டாலருக்கும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல ப்ரோ மாடல் போன்கள் 1000 டாலருக்கும் அதிகமாக இருந்துள்ளது.
ஆனால் ஐபோன் 16 இன் விலை என்பது சற்று அதிகமாகவே இருக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் இதில் பயன்படுத்தக்கூடிய பாகங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதால் ஐபோன் 16 விலையும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
ஐபோன் 16இன் உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 இன் விலையை அதிகரிக்கும் என்றும் இனி வரக்கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததை விட சற்று விலை கூடுதலாகவே இருக்கும் என்றும் நிக்கே ஆசியா என்ற தளம் கணித்துள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலை ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை விட 12 சதவீதம் அதிகமாக இருந்தது.
இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்களை விட ஐபோன் 16இல் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் விலை அதிகமாக இருப்பதால் இந்த விலை ஏற்றம் இருக்கும் என தெரிகிறது.
உற்பத்தி செலவு அதிகரித்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16க்கான சில்லறை விற்பனை விலை குறித்து அறிவிப்பை இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதே போல ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்சில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் அதன் விலையும் அதிகமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
எக்னாமிக் டெய்லி வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் தங்களுடைய போன் எடை குறைவாகவும் லேசானதாகவும் இருப்பதற்காக ஹையரெண்ட் மோல்டட் கிளாஸ் லென்ஸ்களை ஆப்பிள் பயன்படுத்துவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இதற்கான கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் என சொல்லப்படுகிறது.
அண்மையில் ஐபோன் 16 வரிசையில் வெளியாக கூடிய போன்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்தன.
இதில் வழக்கமான ஹரிசாண்டல் கேமரா மட்டுமில்லாமல் வெர்டிக்கல் லைன் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. ஐபோன் 16 டூயல் கேமரா சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பேட்டரி ஆகிய அம்சங்களுடன் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதே போல டிஸ்ப்ளே அளவானது இதற்கு முன்பு வெளியான ஃபோன்களை விட அதிகமாக இருக்கும் என்றும், இது ஓஎல்இடி டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் 16இல் பயோனிக் சிப்செட் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications