ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் என்றாலே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உலகம் முழுவதுமே ஒவ்வொரு மாடல் ஐபோன்கள் வெளியிடப்படும் போதும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பலரும் ஐபோன்களை வாங்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகும். அந்த அளவிற்கு ஐபோன்கள் மீதான கிரேஸ் அதிகமாக இருக்கிறது.
ஆப்பிள் ஐபோன்: ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அதன் முக்கியமான ஐபோன் உற்பத்தி மையமாக சீனா தான் இருந்து வருகிறது. ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிக்கடி ஏற்படக்கூடிய வர்த்தக மோதல்கள் காரணமாக ஐபோன் உற்பத்திக்காக நாம் சீனாவை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது என முடிவெடுத்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை தற்போது இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான் ,டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன .

ஐபோன் உற்பத்தி: உலக அளவில் பயன்படுத்தக்கூடிய 20 சதவீத ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது . படிப்படியாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பெருக்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் உற்பத்தி மையமாக மட்டுமில்லாமல் மிக முக்கியமான ஐபோன் சந்தையாகவும் இருந்து வந்ததுதான் சீனா . ஆனால் சீனாவில் ஆப்பிள் தன்னுடைய ஆதிக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது .
சீன சந்தையை இழக்கும் ஆப்பிள்: கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் சீன சந்தையில் கால் பதித்தது ஆப்பிள் நிறுவனம் . ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை சரிந்து வருகிறது. ஆப்பிளை பொருத்தவரை ஐபோன் விற்பனையில் முதலிடத்தில் அமெரிக்கா, இரண்டாம் இடத்தில் சீனா, மூன்றாம் இடத்தில் ஜப்பான் ஆகியவை இடம் பிடித்துள்ளன. ஆப்பிள் தன்னுடைய இரண்டாவது பெரிய விற்பனை சந்தையான சீனாவை தான் தற்போது இழந்து வருகிறது.

கடையை மூடுவதாக அறிவிப்பு: விற்பனை சரிவால் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வரக்கூடிய தங்களுடைய நேரடி விற்பனை நிலையத்தை மூட போகிறது. டாலியன் பகுதியில் இருக்கக்கூடிய பார்க் லேண்ட் மாலில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய நேரடி விற்பனை நிலையத்தை செயல்படுத்தி வந்தது. வரும் ஆகஸ்ட் 8 முதல் இந்த கடை மூடப்படுவதாக அறிவித்திருக்கிறது.
நேரடி விற்பனை நிலையம் மூடல்: டாலியன் நகரில் இரண்டு இடங்களில் செயல்பட்டு வந்த ஆப்பிளின் நேரடி விற்பனை நிலையங்களில் ஒன்றுதான் இந்த கடை. இது தற்போது மூடப்படுகிறது, மற்றொரு கடை தொடர்ந்து செயல்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த கடை மூடப்படுவதால் வேலை இழக்க கூடிய ஊழியர்களுக்கு ஆப்பளின் மற்ற நேரடி விற்பனை நிலையங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

530 நேரடி விற்பனை நிலையங்கள்: உலகம் முழுவதும் 530 இடங்களில் நேரடி விற்பனை நிலையங்களை வைத்திருக்கிறது ஆப்பிள் இதில் சீனாவில் மட்டும் 56 நிலையங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் தற்போது மூடப்படுகிறது . சீனாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை கடந்த ஆண்டு 66.95 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது .இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் சரிவு, 2022 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் குறைந்த விற்பனை: சீன மக்கள் பட்ஜெட் போன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் ஆப்பிளுக்கு மாற்றாக உள்ளூர் நிறுவனங்கள் தயாரிக்கும் போன்களை அதிகளவில் வாங்குவதும் ஐபோன் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம். இதனால் தான் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஒரு கடையை மூடும் நிலைக்கு வந்திருக்கிறது.
இந்தியாவில் விற்பனை அதிகரிப்பு: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனைக்கான நான்காவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது . 2024ஆம் ஆண்டில் நான்காவது காலாண்டில் இந்தியாவில் விற்பனையான போனில் 10 சதவீத பங்கினை ஆப்பிள் நிறுவனம் பிடித்தது. 2025 ஆம் ஆண்டில் 13 முதல் 14 மில்லியன் போன்கள் வரை இந்தியாவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது ஆப்பிள். இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்களை அமைத்து இருக்கிறது ஆப்பிள் கூடிய விரைவில் பெங்களூரு ,புனே ஆகிய நகரங்களிலும் கடைகளை திறக்க இருக்கிறது. இதன் மூலம் உற்பத்தி மட்டுமில்லாமல் விற்பனையிலும் இந்தியாவை கையகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஒரு முறை சார்ஜ் போட்டா 40 மணி நேரம் நீடிக்கும்: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபோன் 18..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications