ஓரே அறிவிப்பு.. 2500 ஊழியர்கள் பணிநீக்கம்.. கதறும் அமெரிக்க நிறுவன ஊழியர்கள்..!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பல நிறுவனங்களில் பணிநீக்கம் அறிவிப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், தற்போது உயர்தர உற்பத்தி நிறுவனங்களும் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஏற்கனவே ஜெட்லைனர் தயாரிப்பில் பெரியளவில் பின்தங்கியிருக்கும் வேளையில் கமர்சியல் விமான பிரிவில் இருந்து சுமார் 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஓரே அறிவிப்பு.. 2500 ஊழியர்கள் பணிநீக்கம்.. கதறும் அமெரிக்க நிறுவன ஊழியர்கள்..!!

இப்பிரிவின் தலைமை அதிகாரியான ஸ்டீபனி போப் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில், நிர்வாகம் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கும் நிலையில் நிறுவனத்தில் உற்பத்தி பணிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த மறுசீரமைப்பு மூலம் நம்முடைய தொழிற்சாலை உற்பத்திக்கும், சப்ளையர் நிறுவனங்களுக்கும் போதுமான உற்பத்தி நிலைப்பாட்டை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார் ஸ்டீபனி போப்.

Also Read

தற்போது உற்பத்தி அளவை குறைப்பது மூலம் நிறுவனத்தில் கூடுதல் ஊழியர்கள் இருப்பார்கள் என்பதால் இதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என ஸ்டீபனி போப் விளக்கினார்.

இந்த கூடுதல் எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம், வீஆர்எஸ் ஆகியவற்றின் மூலம் சரி செய்யப்படும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு 60 நாள் நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் போயிங் சிஇஓ Kelly Ortberg 2026ஆம் ஆண்டில் 737 ஜெட்லைனர் உற்பத்தி மற்றும் டெலிவரி டார்கெட்-ஐ அடைய முடியாது என அறிவித்த நிலையில், உற்பத்தியிலும், சப்ளையர் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தாமதத்தை உணர்ந்து இந்த உற்பத்தி குறைப்பும், பணிநீக்க திட்டத்தை போயிங் கமர்சியல் விமான பிரிவு அறிவித்துள்ளது.

இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாதம் 47 ஜெட்லைனர் விமானங்களை தயாரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, ஆனால் இந்த 47 என்ற எண்ணிக்கையை 2026 கோடை காலத்தில் எட்டுவதற்கு திட்டம் போட்டது போயிங்.

போயிங் கமர்சியல் விமான பிரிவில் தற்போது 50,494 பேர் பணியாற்றி வரும் வேளையில், 5 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், 2500 பேர் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.

போயிங் இந்தியாவில் டெக் பிரிவை வைத்திருக்கும் வேளையில் இந்த பணிநீக்க திட்டத்தில் டெக் பிரிவு ஊழியர்களும் பாதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தாலும், தற்போதைய அறிவிப்பு மூலம் அனைத்து பணிநீக்கமும் உற்பத்தி துறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+