தன்னுடைய நடிப்பு திறமையால் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களுள் மிக முக்கியமானவர் தான் ஃபகத் ஃபாசில். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஃபாசிலின் மகனாக இருந்தாலும், முழுக்க முழுக்க தன்னுடைய நடிப்பு திறமையால் மட்டுமே முன்னணி நடிகராக திகழ்கிறார்.
திறமையான நடிகர்: எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் எளிதாக நம்மை கவர்ந்து விடுவார். நடிகர் ரஜினிகாந்த் உடன் வேட்டையின் திரைப்படத்தில் சைபர் பேட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமலின் வெற்றி திரைப்படம் விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மாமன்னன் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. புஷ்பா -2 திரைப்படம் மூலம் இந்திய அளவிலும் இவர் பிரபலமானார்.

சொத்து மதிப்பு: ஃபகத் ஃபாசில் ஒரு படத்திற்கு இவர் 4 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். இவர் சுமார் 50 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ஒரு நபராக இருக்கிறார். இவருடைய தந்தை ஃபாசில் புகழ்பெற்ற இயக்குனர், இவருடைய மனைவி நஸ்ரியாவும் புகழ்பெற்ற நடிகை . ஃபக்த் தன்னுடைய 20 வயதிலேயே திரைப்படத்துறையில் கால் பதித்தவர். 2002 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் வெளியான கையேந்தும் தூரத் திரைப்படத்தில் நடித்தார்.
ஆடம்பர கார்கள்: இதனை அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கேரளா கேஃபே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். மலையாள திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்க கூடிய ஒரு ஹீரோ என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது.கொச்சியில் தனக்கு சொந்தமான ஒரு மாளிகையை கட்டி வசித்து வருகிறார். Porsche 911 Carrera S, Mercedes Benz E-class, Range Rover Vogue ஆகிய ஆடம்பர கார்களையும் தனக்கு சொந்தமானதாக வைத்திருக்கிறார். இவற்றின் மதிப்பு 2.50 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

பட்டன் போன் பயன்பாடு: ஃபகத் தன்னுடைய மனைவி நஸ்ரியாவுடன் இணைந்து ஃபகத் ஃபாசில் & பிரெண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆவேசம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. ஃபகத் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பட்டன் போனை பயன்படுத்தினார். அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
ஸ்மார்ட்போன், சோசியல் மீடியாவுக்கு நோ: ஃபகத் ஸ்மார்ட்போன் பயன்படுத்த மாட்டேன் ,சோசியல் மீடியாவிலும் நான் இல்லை என ஏற்கனவே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். சோசியல் மீடியா இல்லாமல் நேரடியாக தகவல் தொடர்பு கொள்வது தான் எனக்கு பிடிக்கும், எனக்கென்று சோசியல் மீடியா அக்கவுண்ட் கூட இல்லை என கூறி இருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் அவர் பட்டன் போன் பயன்படுத்துவது உறுதி ஆகியுள்ளது. ஆனால் இந்த பட்டன் போன் ஐபோன்களை விலை 10 மடங்கு விலை கொண்டது என்பது தான் ஆச்சர்யம்.
ஐபோனை விட 10 மடங்கு விலை: பிரிட்டனை சேர்ந்த Vertu என்ற ஆடம்பர போன் நிறுவனத்தின் பட்டன் போன் தான் இது. Ascent Retro Classic Keypad Phone என்பது இதன் பெயர். 2008ஆம் ஆண்டு Vertu நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்தது. தற்போது நாம் நினைத்தால் கூட இந்த போனை வாங்க முடியாது. ஏனெனில் அந்த நிறுவனம் இந்த போன் விற்பனையையே நிறுத்தி விட்டது. இருந்தாலும் 17 ஆண்டு கால பட்டன் போனை தான் ஃபகத் பயன்படுத்துகிறார்.
என்ன ஸ்பெஷல்: இந்திய ரூபாயில் இந்த விலை 10 லட்சம் ரூபாய் ஆகும், ஐபோன்களை விட 10 மடங்கு அதிக விலை கொண்டிருக்கிறது. டைட்டானியம் ,நீலக்கல் படிகம், கையால் தைக்கப்பட்ட லெதர் என பல்வேறு தனித்துவங்களை கொண்டிருக்கிறது. பட்டன் போனாக இருந்தாலும் ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் ,எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் இணைப்புகள் உள்ளன. ஸ்டீல் கீ பேட் கொண்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் ஆடம்பரமான பட்டன் போனாக அறியப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications