சீனா பல்வேறு வழிகளில் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பதை தன்னுடைய அன்றாட வேலையாகவே கொண்டிருக்கிறதுஒருபுறம் எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடுவது, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி செய்வது , இந்தியாவின் செல்போன் உற்பத்தி ,மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் முக்கியமான பொருட்களின் சப்ளையை நிறுத்தி வைப்பது என பல வழிகளிலும் சீனா இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
பிரம்மபுத்திரா அணை: தற்போது சீனா பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்டும் பணிகளை தொடங்கி இந்தியாவுக்கு மேலும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரம்மபுத்திரா நதி சீனாவின் திபெத், இந்தியா, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் வழியே பாய்கிறது. இந்தியாவில் இதனை பிரம்மபுத்திரா நதி என அழைக்கிறோம். திபெத்தில் இதனை யார்லங் சாங்போ என்றும் வங்கதேசத்தில் ஜமுனா நதி என்றும் அழைக்கிறார்கள். பிரம்மபுத்திரா நதி உலகின் 9ஆவது பெரிய நதி.

பிரம்மபுத்திரா நதி: கைலாஷ் மலை அருகே மானசரோவர் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி அங்கிருந்து திபெத்தில் நுழைந்து அங்கே இருந்து இந்தியா வந்து பின்னர் வங்கதேசத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது. இந்த நதியின் மீது தான் சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது. ஜூலை 19ஆம் தேதி இந்த அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சீன பிரதமர் கலந்து கொண்டார்.
டிசம்பர் மாதம் ஒப்புதல்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி, அதன் மீது மிகப்பெரிய அனல்மின் நிலையத்தை அமைப்பதே சீனாவின் திட்டம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சீன அரசாங்கம் இந்த அணை கட்டுவதற்கான ஒப்புதலை அளித்து விட்டது. சீனாவின் ஐந்தாண்டு கால திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த பிரம்மபுத்திரா அணை கட்டுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டிலேயே சீன அரசாங்கம் இதனை கட்டுவது என முடிவு செய்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது தான் வந்துள்ளது.

நிலநடுக்கம்: இந்த அணை கட்டக்கூடிய இடம் பிரச்சினையாக இருக்கிறது சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் வெளியிடும் தகவலின் படி சீனா இந்த அணையை கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இடம் டெக்டோனிக் பிளேட்கள் நிறைந்து இருக்கக்கூடிய அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஒரு பகுதி. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஒரு பகுதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டுவது என்பது ஒரு மிகப்பெரிய தண்ணீர் குண்டு (Water Bomb) கட்டுவதற்கு சமம்.
பேரழிவை ஏற்படுத்தும்: நிலநடுக்கம் ஏற்பட்டு அணை உடைந்தால் அந்த நீர் முழுவதும் இந்தியாவை நோக்கி தான் வரும். இதில் பேரழிவை ஏற்படுத்தும். இந்தியா, வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளுமே இதனால் பிரச்சினையை சந்திக்கும். இந்தியா இதில் அதிக சிக்கலை எதிர்கொள்ளும் நாடாக இருக்கும்.
சீனாவின் ரகசியம்: சீனா எப்போதுமே தன்னுடைய அணை , நீர் தேக்கங்கள் கட்டுமானம் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பது கிடையாது. பல சமயங்களில் அணை கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் அது பயன்பாட்டுக்கு வரும் போது தான் உலக கவனத்திற்கே வரும். அதுவும் அணையின் நோக்கத்தை சீனா மறைமுகமாகவே வைத்திருக்கும். சீனா இது போல நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் நிறைய அணைகளை கட்டி இருப்பதாக கனடாவை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு: லட்சக்கணக்கான மக்களின் வேளாண்மைக்கும், குடிநீருக்குமான ஆதாரமாகவும் இருக்கிறது பிரம்மபுத்திரா ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கை அதனை வறண்ட நதியாகவும், வெள்ளம் பாயும் நதியாகவும் மாற்றிவிடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நதியின் மேல் பகுதியில் சீனா அணை கட்டுவதன் மூலம் இந்த நீரை கட்டுப்படுத்தவும், அதன் போக்கை தீர்மானிக்கவும் சீனாவுக்கு ஆற்றல் கிடைக்கும்.
இந்த அணை ஒரு 'Water Bomb': எனவே இந்தியாவிற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறைத்து, இந்தியாவில் பிரம்மபுத்திரா நதி வறண்டு போகும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மழை காலங்களில் அதிக நீரை வெளியேற்றி பேரழிவை ஏற்படுத்தும். இந்த அணை நமது பழங்குடி மக்களுக்கும் நமது வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போகிறது இது ஒரு நீர் குண்டு ('Water Bomb') ஆயுதமாகவும் பயன்படுத்தப்படலாம் என அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு கவலை தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டு திடீரென அவர்கள் தண்ணீரை வெளியேற்றினால் சியான் பகுதி முழுவதுமாக அழிந்து விடும் என அவர் மத்திய அரசிடம் கூறியிருக்கிறார்.

மாசுபடுத்தும் சீனா: ஆனால் சீனாவோ இந்த பகுதியில் அணை கட்டுவது எங்களுடைய சட்டபூர்வ உரிமை எனக் கூறி வருகிறது . ஏற்கனவே சீனா பிரம்மபுத்திரா நதியை மாசுபடுத்தி தான் இந்தியாவுக்கு அனுப்புவதாக அசாம் மக்களும் அருணாச்சல பிரதேச மக்களும் குற்றம்சாட்டுகின்றனர். நதி மிகவும் மாசுடன் தான் வருகிறது என்றும் வேளாண்மை பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்தியாவும் அணை கட்ட திட்டம்: இந்தியா ஒருபுறம் சீனாவிடம் தன்னுடைய கவலைகளை தெரிவித்திருக்கிறது, அதே வேளையில் இந்திய எல்லையில் பிரம்மபுத்திரா மீது அணை கட்ட திட்டமிட்டுள்ளது. சீனா ஏற்கனவே பிரம்மபுத்திரா நதி மீது 510 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையத்தை கட்டி இருக்கிறது. மேலும் மூன்று இடங்களில் அணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நான்காவதாக உலகிலேயே மிகப்பெரிய அணையை கட்டுவதற்கு பணிகளை தொடங்கி இருக்கிறது.
தரவுகள் பகிர்வு: பிரம்மபுத்திரா நதியை பொறுத்தவரை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்த ஒரு நதி நீர் பகிர்வு ஒப்பந்தமும் இதுவரை ஏற்பட்டது கிடையாது. ஆனால் நீர் சம்பந்தப்பட்ட தரவுகளை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் இருக்கிறது. மழை காலங்களில் வெள்ளப்பெருக்கை தடுக்க இரண்டு அரசுகளும் இதனை பயன்படுத்துகின்றன. ஆனால் கால்வன் மோதல்களுக்கு பின் சீனா இந்த தரவுகளை பகிர்வதையும் நிறுத்திவிட்டது.
சீனா விளக்கம்: இதனிடையே சீனா வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அணை கட்டப்படுவதால் பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது மாறாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதனால் இயற்கை பேரிடர் நிகழ்வது குறையும் , அணைக்கட்டும் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் வங்கதேசத்திலும் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன என கூறி இருக்கிறார். இந்த நதி பாய்ந்தோடும் நாடுகளின் நலனிலும் சீனா அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்திருக்கிறார். ஆனால் சீனா அண்டை நாடுகளை பற்றி கவலைப்படாத ஒரு நாடு என்ற உண்மை தான் இந்தியாவுக்கு எப்போதோ தெரியுமே.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications