இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அணியும் நகைகள் தனித்துவமாக இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்த நகையை மற்றொரு நிகழ்ச்சிக்கு அணியமாட்டார். அந்த வகையில் பிரத்தியேகமான கலெக்சன்களை வைத்திருக்கிறார். இவர் வசம் இருக்கும் நகைகள் அரிய முகலாய கால கலைப்பொருட்கள் மற்றும் கோல்கோண்டா வைரங்களை உள்ளட்டக்கியுள்ளன.
200 ஆண்டுகள் பழமையான தங்க குந்தன் கிளி பதக்கம் முதல் புகழ்பெற்ற 52.58 காரட் கோல்கொண்டா வைரம் வரை நீதா அம்பானி வசம் இருக்கும் நகைகள் நீண்ட வரலாற்றையும் இந்தியாவின் கைவினைத்திறனையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

200 ஆண்டுகால தொன்மையான கிளி பதக்கம்:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரப்ம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தான் பதவியேற்கும் நிகழ்ச்சி முன்னர் நண்பர்களுக்கு டிரம்ப் விருந்தளித்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவில் நீதா அம்பானி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பல்வேறு உலக தலைவர்களும் தொழில் அதிபர்களும் வருகை தந்திருந்தனர்.

இதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நீதா அம்பானி 18ஆவது நூற்றாண்டு கால தங்கத்தால் ஆன கிளி பதக்கம் ஒன்றை அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது. குந்தன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பதக்கம் கிளியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மரகதம், மாணிக்கம் , முத்து மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டு தனித்துவமாக காட்சி தருகிறது.
முகலாயர் காலத்துக்கு அங்கி:
நீதா அம்பானி வசம் இருக்கும் முக்கியமான மற்றும் வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் ஒரு அங்கி தான் இது. முகலாயர் காலத்து ஷாஜகான் அங்கி என அழைக்கப்படுகிறது. முகலாய பேரரசர் ஷாஜகானுக்கு சொந்தமான அங்கியாக இது இருந்தது என சொல்லப்படுகிறது.

அரிய பச்சிகம் நுட்பத்தில் தங்கத்தின் மீது வைரம், மாணிக்கம் உள்ளிட்டவை பதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பே 200 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. முகலாயர் காலத்து செல்வ வளத்தின் சாட்சியாக இது இருக்கிறது.
கோல்கொண்டா வைரம்:
தூய்மைக்கு பெயர் போன கோல்கோண்டா வைரங்கள் பல்வேறு மன்னர்களின் கிரீடங்களை அலங்கரித்தவை. அவை தற்போது நீதா அம்பானியின் வசம் இருக்கின்றன.
நிதா அம்பானி தனது இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு புகழ்பெற்ற "மிரர் ஆஃப் பாரடைஸ்" வைர மோதிரத்தை அணிந்திருந்தார். இந்த 52.58-காரட் டி-கலர் வைரம் உலகின் மிகச்சிறந்த வைரங்களை உற்பத்தி செய்த இந்தியாவின் புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வைரம் 2019 ஆம் ஆண்டில் கிறிஸ்டி என்ற நிறுவனத்திடம் இருந்து 6.5 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications