இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக TCS எனப்படும் Tata Consultancy Services செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகின் பல முக்கிய நாடுகளில் தனது கிளைகளை கொண்டு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ள நிலையில் இன்று ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவைகளை டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அதேபோல், டிசிஎஸ் நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய தனியார் துறையின் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். 2025 நிலவரப்படி, இந்நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் சமூக பொறுப்புடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தான், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 12.0000 ஊழியர்களை வரும் ஆண்டில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2 சதவீதம் ஆகும். இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 283 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறது. நாடு முழுவதும் அதிக பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது பணிநீக்கம் குறித்த அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
என்ன காரணம்..?: சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தநிலை, முதலீட்டுத் தடைகள் போன்றவை நிறுவனம் எதிர்கொள்ளும் வணிகப் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல், தற்போதைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பல பணிகள் தானியங்கி முறையில் இயங்கக் கூடியதாக மாறி வருகின்றன. இதனால், நடுத்தர மற்றும் மூத்த மேலாளர்களின் பங்களிப்பு குறைவடைய வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை பணியில் இருந்து நீக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிவித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன், "தற்போது பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவரும் இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் தான். இது இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டு மொத்த பணியாளர்களில் வெறும் 2% தான். ஏஐ மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் CEO கே. கிருதிவாசன் மணிகன்ட்ரோலிடம் பேசியபோது, நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 2% பேரைப் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார், குறிப்பாக நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களை அதிகம் பாதிகப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இ
கிருதிவாசன் தெளிவுபடுத்தியபடி, இந்த முடிவு லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தால் எடுக்கப்படவில்லை. ஆனால் இதன் தாக்கம் முழுமையாக கணக்கிட்டப்பட உடன் எங்கள் CFO சமீர் செக்ஸரியா சரியான நேரத்தில் இதை அறிவிப்பார்" என்று அவர் கூறினார்.
இந்த முடிவு ஊழியர்களின் திறமை பொருத்தம் இல்லாமை மற்றும் அவர்களை பணியில் அமர்த்த முடியாத சூழ்நிலையால் ஏற்பட்டது. குறிப்பாக, நீண்ட நாட்களாக பெஞ்சில் இருப்பவர்களும், நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களும் இதில் பாதிக்கப்படலாம் என்று விளக்கினார்.
இதேபோல் AI தொழில்நுட்பத்தின் மூலம் 20% உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்ற காரணத்தாலும் இந்த பணிநீக்கம் செய்யப்படவில்லை, என்று கிருதிவாசன் விளக்கியுள்ளார். "AI-யால் ஏற்படும் பலன்கள் காரணமாக தற்போகு பணிநீக்கம் செய்யப்படவில்லை, தற்போதை 12000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம் திறமை பொருத்தம் இல்லாத இடங்களில் தற்போது இருக்கும் ஊழியர்களை பணியில் அமர்த்த முடியாமல் இருக்கும் காரணத்தால் நாங்கள் இந்த முடிவை எடுக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கிருதிவாசன் கூறியதாவது, "எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் தேவை குறையவில்லை, நாங்கள் தொடர்ந்து உயர்தர திறமை கொண்ட ஊழியர்களை தொடர்ந்து தேடி வருகிறோம், இதேபோல் ஊழியர்களுக்கு பயிற்றுவிப்பதை நிறுத்த மாட்டோம்" என்றார்.
டிசிஎஸ்-ன் முடிவில் பெரும்பாலான பாதிப்பு நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு இருக்கும் என்று கிருதிவாசன் தெளிவுபடுத்தினார். "பிரமிடின் கீழ் பகுதியில் இருக்கும் ஊழியர்கள், நீண்ட நாட்களாக பெஞ்சில் இருப்பவர்களும் பாதிக்கப்படலாம், ஆனால் முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கு இது அதிகப்படியான பாதிப்பை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு கடினமான முடிவு என்றாலும், ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான சாத்தியக்கூறு இல்லாததால் எடுக்கப்பட்டது என்று டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் விளக்கினார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications