டெல்லி: இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கூடிய விரைவில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கின்றன. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று பிரிட்டன் பிரதமருடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். இந்த தடையற்ற ஒப்பந்த இரு நாட்டு வணிகர்களுக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர உள்ளது. நுகர்வோரை பொருத்தவரை குறிப்பிட்ட சில பொருட்களின் விலைகள் குறையும்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தமாகும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி எளிமையானதாக மாறும். பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதி வரி இருக்காது. இரு நாடுகளை சேர்ந்த வணிகர்கள் பரஸ்பரம் தொழில் தொடங்குவது, ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு இருந்த தடைகள் நீக்கப்படும். பொருளாதார ரீதியாக இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.
குறிப்பிட்ட சில பொருட்களுக்கு முழுமையாக இறக்குமதி வரி நீக்கப்படும் அல்லது குறைந்தபட்ச இறக்குமதி வரி விதிக்கப்படும். இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் நாடுகள் எந்த ஒரு வரியும் இல்லாமல் மற்றொரு நாட்டின் சந்தையில் எளிதாக நுழைய முடியும். உலகம் முழுவதும் தற்போது 350 தடையற்ற ஒரு ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு ஒப்பந்தம் அதாவது ஒரே வருமானத்தின் மீது இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிக்கு விலக்கு அளிக்கும் ஒப்பந்தம் இருநாட்டு பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 25.5 பில்லியன் பவுண்டுகளாக உயரும். இதன் மூலம் பிரிட்டனின் ஜிடிபி 4.8 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் வர்த்தகத்தின் மதிப்பு 120 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 60 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
· இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீத பொருட்களுக்கும் பிரிட்டனில் எந்தவித இறக்குமதி வரியும் விதிக்கப்படாது. இதன் மூலம் பிரிட்டனில் இந்திய பொருட்களின் விலை குறையும்.
· இறக்குமதிவரி இல்லாததால் பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய பொருட்களை அதிகளவில் வாங்கி விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டும்.
· அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் கிட்டத்தட்ட 85 சதவீத பொருட்கள் இறக்குமதி வரியே இல்லாமல் பிரிட்டனுக்கு செல்லும்.
· பிரிட்டன் மற்றும் இந்தியா இடையிலான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த மூலம் சேவைகள் துறை , ஐடி, நிதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பலனடையும்.
· இந்தியா பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை குறைப்பதாக முடிவு செய்திருக்கிறது. இதில் மருத்துவ கருவிகள், நவீன இயந்திரங்கள், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் அடங்கும்.
· ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்ளுக்கான இறக்குமதி வரி 100 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறையும். இதனால் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறையும்.
· விஸ்கி மற்றும் ஜின் மீது விதிக்கப்பட்டு இருந்த 150 சதவீத இறக்குமதி வரியானது முதலில் 75 சதவீதமாகவும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பிறகு 40 சதவீதமாகவும் குறையும்.
· இரு நாடுகளுக்கு இடையிலான இந்த தடையற்ற வர்த்தகம் என்பது நுகர்வோருக்கு பல்வேறு சாதகங்களை ஏற்படுத்தும். ஏனெனில் இந்தியாவில் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும்.
· பிரிட்டனில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும். இருநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் இது பலனளிக்கும்.
· இந்த ஒப்பந்தத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சமூக பாதுகாப்பு ஒப்பந்தம். ஒரே வருமானத்தின் மீது இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரிக்கு மூன்று ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டனில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமானது கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் செலுத்தும் வரியும் சேமிக்கப்படுகிறது.
· இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் துணிமணி ,தோல் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் மற்றும் நகைகள், ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பிரிட்டன் ஒரு மிகச் சிறந்த சந்தை வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
· அதே போல இந்திய நுகர்வோர் இனி அழகு சாதன பொருட்கள், மருத்துவ சாதனங்கள், மின்னணு இயந்திரங்கள் ,சாக்லேட் மற்றும் பிஸ்கட்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலைக்கே வாங்கலாம்.
· நகைகள் ,பொறியியல் சார்ந்த சரக்குகள், என்ஜின்கள், இயற்கை ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் இனி அவற்றை அதிகளவு பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
· இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள், பதப்படுத்தப்பட்ட இறால் வகைகள் பிரிட்டன் வணிகர்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும் எனவே அவர்கள் அதிகமாக இந்தியாவிலிருந்து இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் வருவார்கள்.
· நெகிழி ,கனிமம், ரசாயனம், ரப்பர், காகிதம், செராமிக் ,கண்ணாடி உள்ளிட்டவற்றுக்கு பிரிட்டனில் முழுமையான வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இந்தியாவில் இந்த வணிகங்களில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் இதன் மூலம் பெரிய அளவில் பலன் பெற முடியும்.
முன்னதாக இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பிரதமர் மோடி இந்தியா பிரிட்டன் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகம் ,முதலீடு, வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம் , புதிய கண்டுபிடிப்புகள் என பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்க இருக்கிறது என தெரிவித்துள்ளார். பிரிட்டன் உடனான இந்த வர்த்தகப் பயணத்தை இந்தியா ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications