லண்டன்: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அரசு முறை பயணமாக லண்டன் சென்றிருக்கும் பிரதமர் மோடி , பயணத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.
மோடி லண்டன் பயணம்: இந்த சந்திப்பின் போது இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த சூழலில் பிரிட்டனுடன் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வகையில் ஊக்கம் தருவதாக இருக்கிறது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 99 சதவீத பொருட்கள் எந்தவித வரியும் இல்லாமல் பிரிட்டன் சந்தைக்குள் நுழைய முடியும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய துணிமணிகள், ஜெனரிக் மருந்துகள், மருத்துவக் கருவிகள், தோல் பொருட்கள் ,வேளாண் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களுக்கு பிரிட்டன் சந்தையில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது எந்த ஒரு வரியும் இல்லாமல் இந்த பொருட்கள் பிரிட்டன் சந்தையில் நேரடியாக நுழைய முடியும் .
இந்தியாவுக்கு ஜாக்பாட்: அதேபோல பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதும் எளிதாக பட்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கார்கள், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள், காஸ்மடிக் பொருட்கள், மருந்துகள் இந்திய சந்தைக்குள் எளிதாக நுழையும். மேலும் வரி இல்லாததால் அவை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும். பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா சராசரியாக 15 சதவீத வரி விதித்து வந்தது அது 3 சதவீதமாக குறையப்போகிறது.

என்னென்ன துறைகளுக்கு சாதகம்: அதேபோல விஸ்கிக்கு இது நாள் வரை விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டு 75 சதவீதமாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீதமாகவும் குறைக்கப்படும். பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் வாகன உற்பத்தி பாகங்களுக்கான வரியும் படிப்படியாக குறைக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை சேர்ந்த ஜவுளித்துறை, தோல் பொருட்கள் உற்பத்தி துறை மற்றும் வேளாண் துறைகள் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை பெற்றிருக்கின்றன.
வர்த்தகம்: இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ஏற்றுமதி 2030-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காகும் என்றும், ரசாயன ஏற்றுமதி 30 லிருந்து 40% வரை உயரும் என்றும் கணிக்கப்படுகிறது. நகைகள் மற்றும் நவரத்தினங்களின் ஏற்றுமதி தற்போது 941 மில்லியன் டாலராக இருக்கிறது இது அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த மூலம் இரு நாடுகளிலும் பல்வேறு பொருட்களின் விலை குறையும்.
இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?: இந்தியாவை பொருத்தவரை ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் போன்ற கார்களின் விலை குறையும். பிரிட்டனை சேர்ந்த மதுபானங்கள் குறைவான விலைக்கு கிடைக்கும். மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும். காஸ்மெடிக்ஸ் , சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். மருத்துவ கருவிகளின் விலையும் வெகுவாக குறைய உள்ளது.
பிரிட்டன் பிரதமர் :இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை தந்திருக்கிறது என பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரிட்டனில் புதிதாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் . இந்தியாவிலிருந்து ஆறு பில்லியன் டாலர்கள் முதலீடு பிரிட்டனுக்கு வரப்போகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
written by : Devika Manivannan
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications