சொந்த வீடு என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்நாள் கனவு, ஆனால் உயர்ந்த வட்டி விகிதங்கள் அந்தக் கனவை எட்டாக்கனியாக்கி வருகிறதா? இதற்கான விடையைத் தான் ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கமும் 2026 மத்திய பட்ஜெட்டில் ஆவது வருமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் இருக்கும் 80C வரம்பு மற்றும் வீட்டுக் கடன் வட்டி வரிச் சலுகை ஆகியவற்றை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. குறிப்பாக, தற்போது உள்ள 2 லட்சம் ரூபாய் வட்டி வரி விலக்கு வரம்பை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த முறை சலுகைகளை அறிவிப்பாரா? பழைய வரி முறையில் இருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வசந்த காலம் பிறக்குமா? 2026 பட்ஜெட்டில் 80சி பிரிவின் கீழ் விலக்குகள் அதிகரிக்குமா, வேறு எந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது, வாருங்கள் பார்க்கலாம்.

யாருக்கு சலுகை?
இந்திய அரசு பல்வேறு வரி விலக்குகளை வழங்குவதன் மூலம், கடந்த பல ஆண்டுகளாக வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் இருந்து பலருக்கும் சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இருப்பினும் இந்த சலுகைகள் பெரும்பாலும் பழைய வரி முறையை தேர்தெடுப்பவர்களுக்கே கிடைத்து வருகின்றன. தற்போதுள்ள புதிய வரி முறையில், வருமான வரிச் சட்டத்தின் பல விலக்குகள் மற்றும் சலுகைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பலரும் பழைய வரி முறையையே விரும்புகின்றனர். இதற்கு அதில் உள்ள சலுகைகளே முக்கிய காரணமாகவும் உள்ளது.
இருப்பினும் கல்வி, மருத்துவம் மற்றும் சொத்து விலைகள் பலமடங்கு உயர்ந்திருந்தாலும், பழைய வரி விதிப்பு முறையில் அளித்து வந்த வரிச் சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. ஆக அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் அரசு, வரவிருக்கும் பட்ஜெட்டில் ஆவது இதுபோன்ற சலுகைகள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
முக்கிய வரி விலக்குகளின் தற்போதைய நிலை?
பிரிவு 80சி: கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே மாற்றப்படாமல் இருக்கும் இந்த 1.5 லட்சம் ரூபாய் வரி சலுகையானது, பல தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். குறிப்பாக பிபிஎஃப், இ.எல்.எஸ்.எஸ் மற்றும் கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல் மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் என பல முதலீடுகளும் இதன் கீழ் சலுகை பெற முடியும். ஆக அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில் 1.5 லட்சம் ரூபாய் வரம்பை 3 லட்சம் ரூபாயாக உயர்த்துவது, நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை உயர்த்த உதவும்.
பிரிவு 80டி: தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்த்ல், சுய மற்றும் குடும்பத்தினருக்கு 25,000 ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாய்க்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மருத்துவ செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் அரசு இதையும் கவனத்தில் கொள்வது நல்லது. இது நடுத்தர காலங்களில் குடும்பங்களின் நிதிச் சுமையை குறைக்க உதவும்.
வீட்டுக் கடன் வட்டி விலக்கு: சொத்துகள் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வங்கிகளின் வட்டி விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் சொந்தமாக வசிக்கும் வீட்டிற்கான வட்டி வரி விலக்கு பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல், அப்படியே 1 லட்சமாக மட்டுமே உள்ளது. இதை 3 லட்சம் அல்லது புதிய வரி விதிப்பு முறையிலும் அமல்படுத்துவது பெரும் நிம்மதியை தரலாம்.
பிரிவு 80சிசிடி (1பி): தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு செய்வதற்கு, கூடுதலாக 50,000 ரூபாய் வரி விலக்கு வழங்கப்படுகிறது. ஓய்வுக்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பாக மாற்ற, இந்த வரம்பை 1 லட்சம் ரூபாயாக உயர்த்துவது அவசியமாகிறது. அதாவது பொதுவாக 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு பெறுவோம். ஆனால் என்பிஎஸ் முதலீட்டாளர்கள் 1.5 லட்சம்+50,000 ரூபாய் சேர்த்து 2 லட்சம் ரூபாய் சலுகையை பெற முடியும்.
மறுபரிசீலனை அவசியம் ஏன்?
பணவீக்க முரண்பாடு: வீட்டுச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், வரி விலக்கு வரம்புகள் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பது வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கொள்கை சீரமைப்பு: சேமிப்பு, ஆரோக்கியம் மற்றும் வீட்டு வசதி போன்ற அரசின் முக்கிய நோக்கங்களை அடைய இந்த வரம்புகளை உயர்த்துவது அவசியம்.
புதிய வரி முறையில் சலுகைகள்: புதிய வரி முறை எளிமையானது என்றாலும், அதில் சில அடிப்படை சேமிப்பு சலுகைகளை (Health & Savings) இணைப்பது மக்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.
மொத்தத்தில் வரவிருக்கும் பட்ஜெட் 2026ல் அரசு மேற்கண்ட சலுகைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பலரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications