அமெரிக்கா மற்றும் பிரிட்டன்அடுத்தபடியாக, சீனா நாட்டின் முன்னணி ஷாட் வீடியோ செயலியான TikTok ஐ தடை செய்த நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து-ம் இணைந்துள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய ஆணையமும் அதன் ஊழியர்களுக்கு கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் TikTok ஐ இன்ஸ்டால் செய்வும், பயன்படுத்தவும் தடை விதித்தது.
சீன அரசாங்கம் டிக்டாக் மூலம் மக்களினஅ தரவு திருட்டு மற்றும் உளவு பார்ப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் வேளையில் நியூசிலாந்தும் இப்பட்டியலில் இணைந்துள்ளது டிக்டாக் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆனாலும் டிக்டாக் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது தான் உண்மை.
டிக்டாக் தடை
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பா, நியூசிலாந்து நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா டிக்டாக்-ஐ மொத்தமாக தடை செய்தது. ஆனால் இப்பட்டியலில் இருக்கும் நாடுகள் அரசு அதிகரிகள், பாதுக்காப்பு துறை அதிகாரிகள் மட்டுமே அரசுக்கு சொந்தமான கருவிகளில் டிக்டாக் பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளது.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் இருந்து டிக்டாக் தடை செய்ய வேண்டும் என அறிவித்த போது, அமெரிக்க அரசு டிக்டாக்-ஐ சீனா மற்றும் உலக நாடுகளுக்கு அளிக்கும் சேவையை தனியாக பிரித்து, குளோபல் சேவை அளிக்கம் நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்து கூட்டணி முறையில் இயங்க அறிவுறுத்தியது.
1 பில்லியன் இன்டால்
இதுநாள் வரையில் இதற்கு முடிவு எடுக்கப்படாமல் இருக்கும் நிலையிலும், உலக நாடுகள் தடை செய்த நிலையிலும் டிக்டாக் 1 பில்லியன் இன்டால்களை பெற்றும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த தடையெல்லாம் இல்லாமல் இருந்தால் இந்த நேரத்தில் 1.5 பில்லியன் இன்டால்களை பெற்றிருக்கும்.
ஜி ஜின்பிங்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பதட்டங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக பதவியேற்றியுள்ள நிலையில் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பயணத்தை வேகப்படுத்த உள்ளது.
குற்றச்சாட்டு
அமெரிக்க அரசு மற்றும் சட்ட வல்லுனர்கள் டிக்டாக் செயலி வாயிலாரக அமெரிக்க பயனர் தரவு சீனாவிற்கு அனுப்பப்படலாம் என்று நம்புகிறார்கள். சீன நிறுவனங்களின் மீது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இரும்புப் பிடியை கொண்டு உள்ளது, இதனால் உலக மக்களின் தரவு சீன அரசாங்கத்தின் கைகளில் இறங்கக்கூடும் என அதிகளவில் நம்பப்படுகிறது.
சீன டெக் வல்லுனர்கள்
இதேபோல் இன்றளவும் டிக்டாக் செயலியின் தரவுகளை சீனாவில் இருக்கும் டெக் வல்லுனர்கள் பயன்படுத்தும் அளவில் தான் உள்ளது. இது பல முறை அமெரிக்க டிக்டாக் நிறுவன கூட்டத்தில் நிருபிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications