டெல்லி: 2025ஆம் ஆண்டு உலக அரசியல் பல்வேறு மாற்றங்களை சந்தித்திருக்கிறது. பிரிந்திருந்த இந்தியாவும் சீனாவும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன . ஒன்றாக இருந்த இந்தியாவும் அமெரிக்காவும் லேசான பிரிவை சந்தித்திருக்கின்றன .
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். இதனை அடுத்து நாட்டின் வர்த்தக கொள்கைகளை பெரிய அளவில் மாற்றம் செய்தார் . இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிக்கிறது என்பதை காரணமாக கூறி தான் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை அவர் விதித்தார் .

இந்தியாவை சேர்ந்த ஜவுளி உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களும் இந்த வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கத்தை உணர தொடங்கின. குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர் கரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தோல் பொருள் உற்பத்தியாளர்கள் பலரும் அமெரிக்க அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை தங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர் .
இந்த நிலையில் தான் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அமெரிக்காவுடன் இந்த வரி விவகாரத்தை எப்படி தீர்க்கப் போகிறது என உலகமே உற்று நோக்கியது . இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சீனா இந்தியாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது . சீன வெளியுறவுத்துறை அமைச்சர் முதலில் இந்தியாவிற்கு வருகை தந்தார் . இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் . இந்த மாநாடு தான் இந்தியா சீனா இடையிலான உறவில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது . இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஸீ ஜின் பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்தார் . மூவருக்கும் இடையிலான கலந்துரையாடல்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிய அளவில் டிரெண்டானது.

இந்தியா இப்படி சீனா மற்றும் ரஷ்யாவிடம் நெருக்கம் காட்டியது அமெரிக்காவிற்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது . அமெரிக்க அரசுக்கு வரிவிதிப்பு நடவடிக்கையின் மூலம் இந்தியாவை நாம் சீனாவிடமும் ரஷ்யாவிடமும் இழந்து விட்டோமோ சீனாவின் ஆதிக்கம் இதன் மூலம் அதிகரிக்க போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது .
இதனை அடுத்து தான் டிரம்ப் மீண்டும் இந்தியாவுடன் உறவை புதுப்பிக்க முன்வந்திருக்கிறார். இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பிரச்னை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தொலைபேசி வாயிலாக அவரை அழைத்து வாழ்த்து கூறினார்.
இதனை அடுத்து இரு தலைவர்களுமே நண்பர்கள் எனக்கூறி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் . இந்தியா சீனாவின் பக்கம் சாய்வதை விரும்பாமல் தான் டிரம்ப் இந்தியா மீது நட்புரீதியான அணுகுமுறையை காட்டத் தொடங்கி இருக்கிறார். அதுதான் இந்த வர்த்தக பேச்சு வார்த்தை தொடங்குவதற்கான ஒரு காரணமாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவுடனான இந்த வர்த்தக மோதலை அமைதியான முறையில் எதிர் கொண்டு சாதித்திருக்கிறது. தற்போது இந்தியா சீனாவின் நட்பையும் பெற்றுவிட்டது அதே வேளையில் அமெரிக்காவின் நட்பையும் பெற்றுவிட்டது .இந்த விவகாரத்தில் சீனா அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவிற்கு தான் வெற்றி கிடைத்திருக்கிறது.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு



Click it and Unblock the Notifications