உலகெங்கிலும் பல வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார நாடுகளில் வர்த்தகம் செய்வது போலவே, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டிலும் வர்த்தகம் செய்து வருகிறது. இஸ்ரேல் நாட்டில் தற்போது பெரும் போர் வெடித்துள்ள காரணத்தால் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் நிலை குறித்த கேள்விகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான பிரச்சனை மூலம் இஸ்ரேலிய நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், உள்ளூர் அலுவலகங்கள், பணியாளர்கள் என அனைத்து வர்த்தக அமைப்புகளும் முழுமையாக இயங்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. TCS, HCL, Wipro, Infosys ஆகிய நிறுவனங்களுக்கு MENA எனப்படும் Middle East and North Africa சந்தையில் வர்த்தகம் பெற்ற முதல் படியாகவும், உறுதியான இடமாகவும் இருப்பது இஸ்ரேல் தான்.

சமீபத்தில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. இதனால் MENA பகுதி வர்த்தகத்தை அடைய இஸ்ரேல் இந்திய ஐடி சேவை நிறுவனங்களும் பொக்கிஷம் போன்றது.
இஸ்ரேலில் TCS: ஏப்ரல் 2023 நிலவரப்படி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இஸ்ரேல் நாட்டில் மட்டுமே சுமார் 1,100 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்திய ஐடி சேவை துறையின் மிகப்பெரிய IT சேவை நிறுவனமான டிசிஎஸ் இஸ்ரேல் நாட்டில் 2005 ஆம் ஆண்டில் இருந்து தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. மத்திய-கிழக்கு பகுதியில் முதல் முறையாக வர்த்தகத்தையும் அலுவலகங்களையும் திறந்த முதல் ஐடி சேவை நிறுவனமாக உள்ளது.
TCS இஸ்ரேல் நாட்டில் பல அரசு திட்டங்கள் உட்பட பல பெரிய மதிப்புடைய திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் தற்போதைய முக்கியமான திட்டங்களில் ஒன்று நிம்பஸ், இதில் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சகம், பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் நீர் ஆணையம் ஆகியவற்றின் கிளவுட் டிரான்ஸ்பார்மேஷன் திட்டமாகும்.
இந்த ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரேலில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக டிசிஎஸ் நிறுவனம் தனது Open Innovation program அறிமுகப்படுத்தியது. மேலும், டிசிஎஸ் 2020-2021ல் இஸ்ரேலின் முதல் முழு டிஜிட்டல் வங்கிக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியது.
விப்ரோ: இஸ்ரேல் நாட்டில் விப்ரோ-வும் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 2016ல் இஸ்ரேலிய விமான பாகங்கள் தயாரிப்பாளரான HR Givon என்னும் நிறுவனத்தை வாங்கியது. தற்போது Wipro Givon என்ற பெயருடன் ஏரோஸ்பேஸ் துறையில் பணியாற்றி வருகிறது. Wipro Givon நிறுவனம் Kiryat Bialik என்னும் பகுதியில் 77 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
Infosys: இஸ்ரேல் நாட்டில் இன்போசிஸ் நிறுவனம் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை இயக்க இஸ்ரேலின் தலைமை விஞ்ஞானி அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்போசிஸ் அந்நாட்டின் அரசு அமைப்புடன் வர்த்தகம் செய்தாலும் அலுவலகம் இல்லாமல் இயங்கி வருகிறது.
HCL: இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCLTech இஸ்ரேலில் பிற இந்திய ஐடி சேவை நிறுவனங்களை போல குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பெற்றுள்ளது. HCL நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் ஹெர்ஸ்லியா மற்றும் நெதன்யா ஆகிய நகரங்களில் இரண்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலவும் மோதலில் தற்போது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்பில்லை, காரணம் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் அனைத்தும் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
ஆனால் புதிய வர்த்தகத்தை பெறுவதில் கட்டாயம் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றால் மிகையில்லை. இந்தத் துறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஐடி நிறுவனங்களும், சந்தை வல்லனுர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
மேலும் டிசிஎஸ் நிறுவனம் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான பிரச்சனையை கூர்ந்து கவனிப்பது மட்டும் அல்லாமல் தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications