ஐடி துறையில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்ற பதற்றத்தின் மத்தியிலே ஊழியர்கள் பலரும் இருந்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலை அச்சத்தின் மத்தியில், இன்னும் என்ன மாதிரியான சவால்கள் எல்லாம் காத்திருக்கின்றனவோ?
இத்தகைய சவாலான நிலைக்கு மத்தியில் பணி நீக்கம், புதிய பணியமர்த்தல் நிறுத்தம், மூன்லைட்டிங், சம்பள குறைப்பு என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. பல நிறுவனங்களில் எப்போது என்ன அறிவிப்பு வருமோ என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
நெருக்கடியான நிலை
இந்த நெருக்கடியான நிலையிலும் ஐடி துறையில் அட்ரிஷன் விகிதமானது உச்சத்தில் உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் சுமார் 20% இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இந்த காலகட்டத்தில் கூட அட்ரிஷன் விகிதம் உச்சத்தில் காணப்படுகின்றது.
பணியமர்த்தல்
உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் உச்சம் எட்டி வந்த நிலையில், ஐடி துறையில் தேவையானது மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்டு வந்தது. ஐடி துறையில் அதிகரித்த இந்த தேவையின் காரணமாக, பணியமர்த்தலானது மாபெரும் அளவில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதமும் மிக மோசமாக இருந்தது.
அட்ரிஷன் விகிதம்
நடப்பு டிசம்பர் காலாண்டிலேயே 18 - 20% வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டிலும் உச்சத்தில் இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 27.1% ஆகவும், விப்ரோ நிறுவனத்தில் 23% ஆகவும், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5% ஆகவும், ஹெச் சி எல் நிறுவனத்தில் 23.8% ஆகவும் இருந்தது.
பணியமர்த்த யோசனை
ஐடி நிறுவனங்களின் தற்போதைய பணி நீக்கத்தினால் ஜூனியர் முதல் நடுத்தர ஊழியர்கள் வரையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெரு நிறுவனங்களிலும் நிலைமை இன்னும் கடுமையாக உள்ளது எனலாம். தற்போது மந்த நிலைக்கு மத்தியில், நிலைமை இன்னும் கடுமையாக உள்ளது.
தாங்களாகவே வெளியேறும் ஊழியர்கள்
குறிப்பாக அவர்கள் புதியதாக பணிக்கு வரும் பிரெஷ்ஷர்கள், பெஞ்ச் ஊழியர்கள் என பல தரப்பினரையும் நிறுவனங்கள் பணியில் அமர்த்த யோசித்து வருகின்றன. இதற்கிடையில் பலரும் தாங்களாகவே விரும்பி வேறு வேலைக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பிரெஷ்ஷர்கள் மத்தியில் இந்த போக்கானது அதிகரித்துள்ளது.
அட்ரிஷன் ஏன் அதிகரிப்பு?
ஐடி துறையில் சம்பள செலவு என்பதே மிகப்பெரிய செலவினமாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த சவாலான காலகட்டத்கில் சம்பளம் குறைப்பு, போனஸ் குறைப்பு என பல நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இது இனி பணியமர்த்தப்படவிருக்கும் ஊழியர்களுக்கும் சம்பள குறைப்பு செய்ய வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக திறன் வாய்ந்த ஊழியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகி வருகின்றனர். இது நிறுவனங்களின் மார்ஜினை அதிகரிக்க உதவும் என்றாலும், அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளது.
எப்போது அட்ரிஷன் குறையும்?
பல ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள பற்பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது வரவிருக்கும காலாண்டுகளில் அட்ரிஷன் விகிதம் குறைய வழிவகுக்கலாம். ஐடி துறையில் தேவையானது சரிந்து வரும் நிலையில் இதுவும் அட்ரிஷன் விகிதம் குறைய வழிவகுக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications