ஐடி நிறுவனங்களுக்கு தலைவலியாக மாறும் செலவு.. ஏன்.. என்ன காரணம்..!

ஐடி தேவையானது அதிகரித்துவரும் தேவைகளுக்கும் மத்தியில், ஊழியர்களுக்கான தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதற்கிடையில் ஐடி நிறுவனங்களுக்கு பல பெரிய அளவிலான புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தன. இதனால் ஐடி துறையில் திறன்களுக்கான தேவையானது மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

எனினும் இப்படியொரு நிலையில் ஊழியர்களின் வெளியேறும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்

கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்

ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் என்பது வரலாறு காணாத அளவு சமீபத்திய காலாண்டுகளில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள, அதிக அளவிலான சம்பள உயர்வு, பதவி உயர்வு, வருடத்தில் இருமுறை போனஸ் என பல பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. எனினும் ஊழியர்களின் வெளியேறும் விகிதமானது குறைந்தபாடாக இல்லை எனலாம்.

அதிகரிக்கும் திறனுக்கான போர்

அதிகரிக்கும் திறனுக்கான போர்

நிறுவனங்கள் சரியான காலத்தில் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுக்கும் விதமாக, ஒப்பந்தங்களை சரியான காலத்தில் முடிக்க தொடர்ந்து பணியமர்த்தி வருகின்றன. குறிப்பாக பிரெஷ்ஷர்களை அதிக அளவில் பணியமர்த்த தொடங்கியுள்ளன. அவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஐடி துறையில் திறனுக்கான போரானது பெரியளவில் இருந்து வருகிறது.

செலவு அதிகரிப்பு

செலவு அதிகரிப்பு

நிலவி வரும் அசாதாரண நிலையை சமாளிக்க ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள, குறிப்பாக அதிக திறனுள்ள ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள அதிக அளவிலான சம்பளங்களை கொடுத்து ஊக்குவித்து வருகின்றன. இதற்கிடையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவானது, 7 - 10% முந்தைய காலண்டினை விட அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பள அதிகரிப்புடன் செலவும் அதிகம்

சம்பள அதிகரிப்புடன் செலவும் அதிகம்

இதே நிறுவனங்கள் பணியமர்த்தலை அதிகரித்துள்ள நிலையில் கூட, அதிகளவிலான தேவையினால் சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நிறுவனங்கள் வழகத்திற்கு மாறாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. அதுவும் அதிகளவிலான சம்பளமும், இந்த நேரத்தில் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

டிசிஎஸ் கருத்து

டிசிஎஸ் கருத்து

குறிப்பாக ஐடி துறையில் டிஜிட்டல் திறனுக்கான தேவை விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவு விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக முன்னணி ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன. டிசிஎஸ் நிறுவனம் இது குறித்து திறனுக்கான தேவை அதிகம் உள்ள நிலையில், செலவுகளும் அதிகரித்துள்ளது. இதனால் சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் என்ன சொல்கிறது?

இன்ஃபோசிஸ் என்ன சொல்கிறது?

இன்ஃபோசிஸ் நிறுவனமானது சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், இது மார்ஜினில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஆனால் இது தற்போதைய நிலையில் இது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் சம்பளம் அதிகரித்துள்ளதும் மார்ஜின் விகிதத்தினை பாதித்துள்ளது.

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னால்ஜி

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னால்ஜி

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னால்ஜி நிறுவனம் இரண்டாவது காலாண்டில், சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் சப்கான்ட்ராக்டர்களுக்கான செலவு 7.3% ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 14% செலவும், இரண்டாவது காலாண்டில் 13%மும் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஊழியர்களுக்கான செலவினம் கடந்த ஆண்டில் 59% ஆக இருந்த நிலையில், கடந்த இரண்டு காலாண்டில் 55% மேலாக உள்ளது.

திறனுக்கான பற்றாக்குறை

திறனுக்கான பற்றாக்குறை

குறுகிய காலத்தில் எதிர்பாராத அளவு தேவையானது அதிகரித்துள்ள இந்த சமயத்தில், சப்கான்ட்ராக்டர்களின் செலவும் அதிகரித்துள்ளது. இருப்பினும் இன்று வரையில் டிஜிட்டல் திறனுக்கான தேவையானது அதிகம் உள்ளது. ஆனால் ஊழியர்கள் குறைவாகவே உள்ளன. இதனால் தற்போது வரையிலும் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்களை இழந்து விடுவோமோ? என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

பிர்லாசாப்ட் கருத்து

பிர்லாசாப்ட் கருத்து

பிர்லாசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தர்மேந்தர் கபூர், உங்களால் காத்திருக்க முடியாது என்ற சூழலில், அதிக செலவு செய்து தான் ஆக வேண்டும். இதே சப்கான்ட்ராக்டர்கள் மூலமாக செல்லும் போது செலவு இன்னும் சற்று அதிகரிக்கும். ஆக இது இன்னும் சற்று செலவு அதிகரிக்க வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+