கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டரை நோக்கி படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றின் போது ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய கூறின. இதனால் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே திரும்பினர். இது தான் சென்னையை தாண்டி மற்ற நகரங்களிலும் ஐடி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய காரணமாக அமைந்துவிட்டது.

தற்போது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக ஐடி நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களை நிறுவுவதற்கு கோயம்புத்தூரையே தேர்வு செய்கின்றன.

கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டரை நோக்கி படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்..!

தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் வெளியீட்டுள்ள தகவலின் படி தற்போது இன்போசிஸ், அசெஞ்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் தங்களுடைய அலுவலகங்களை நிறுவுவதற்கு முன் வந்திருப்பதாகவும் அவற்றின் விருப்பமான நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறது. ஏற்கனவே டிசிஎஸ், ஐபிஎம், டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களும் கோயமுத்தூரில் தங்களுடைய அலுவலகங்களை நிறுவி விட்டன.

2010 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சார்பாக கோயம்புத்தூரில் ஒரு ஐடி பூங்கா நிறுவப்பட்டது. 61 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஐடி பூங்காவில் முழுமையாக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் 158 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் ஐடி பூங்காவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த இடத்தில் இரண்டு பெரிய ஐடி நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை நிறுவுவதற்கு முன் வந்துள்ளனர் என்கின்றனர் அதிகாரிகள்.

கோயம்புத்தூரில் மொத்தம் ஐந்து ஐடி பூங்காக்கள் இருக்கின்றன. ஒன்று அரசுக்கு சொந்தமானது நான்கு தனியாருக்கு சொந்தமானது . இந்த ஐந்து ஐடி பூங்காக்களுமே தற்போது முழுமையாக இடங்கள் நிரம்பிவிட்டனவாம்.

பெரிய நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கோவை நோக்கி படையெடுப்பதால் அங்கே கூடுதல் ஐடி பூங்காக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கேஜிஐஎஸ்எல் ஐடி பூங்கா 4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதே போன்ற இரண்டு மடங்கு பரப்பளவில் புதிய ஐடி பூங்காவை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

கோயம்புத்தூரில் தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்களும் ஐடி மற்றும் பொறியியல் சார்ந்த கல்விகளை வழங்குகின்றன. அதுவும் உயர்தரத்திலான கல்வி வழங்கப்படுகிறது. அது மட்டும் இன்றி உள்கட்டமைப்பும் படிப்படியாக அரசால் மேம்படுத்தப்பட்டு வருகிறது ,திறன்மிகு பணியாளர்களும் எளிதாக கிடைக்கின்றனர் எனவே தான் ஐடி நிறுவனங்கள் இங்கே நோக்கி வருகின்றன என்கிறார்கள் தொழில் துறை சார்ந்தவர்கள்.

முன்பெல்லாம் கோயம்புத்தூரில் பெரிதாக இணையதள வசதியும் அல்லது அலுவலகம் தொடங்குவதற்கான இடங்களோ கிடையாது .ஆனால் தற்போது அவை அனைத்தும் எளிதாக கிடைக்கிறது என்கிறார் ANGA Information Technologies நிறுவனத்தின் தலைவர் சண்முகப்பிரியா.

மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையை விட கோயம்புத்தூரில் பணி புரிவதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்களாம். போக்குவரத்து நெரிசல், காற்று மாசு உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இங்கே இல்லை என்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அரசு அதிகாரிகள் தெரிவிக்கும் தகவலின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இங்கே ஐடி துறை சார்பாக 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன , அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+