இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிசன்ட் (Cognizant), இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவை அண்மை காலமாக பெருமளவில் இன்ஜினியரிங் சேவை நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றன. அதிகரிக்கும் போட்டியை சமன்படுத்தவும், தங்களது வருவாயை விரிவுபடுத்தவும் ஐடி நிறுவனங்கள் இந்த புதிய பாணியை பின்பற்றுவது தெரியவந்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் அண்மையில் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பெல்கான் (Belcan) என்ற மிகப்பெரிய பொறியியல் சேவை நிறுவனத்தை 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து கைப்பற்றியது. காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனம் கையகப்படுத்தக்கூடிய இரண்டாவது பொறியியல் நிறுவனம் இது.

இதேபோல பல்வேறு ஐடி நிறுவனங்களும் பொறியியல் சேவை துறையை சார்ந்த நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இன்போசிஸ் நிறுவனம் ஜெர்மனியை அடிப்படையாகக் கொண்ட இன்டெக் (in-tech) என்ற இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தை கைப்பற்றியது.
அதாவது பொறியியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையை சேர்ந்த இந்த நிறுவனத்தை 480 மில்லியன் டாலர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் வாங்கியது. ஏற்கனவே ஜனவரி மாதம் இன்போசிஸ் இன் செமி (InSemi) என்ற செமி கண்டக்டர் நிறுவனத்தை 33 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.
தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது அசெஞ்சர் (Accenture) நிறுவனமும் யுஎம்எல்ஏயூடி (umlaut) என்ற நிறுவனத்தை ஒரு பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. ஹெச்சிஎல்(hcl) நிறுவனம் 350 மில்லியன் டாலர்களுக்கு ஒரு பொறியியல் சேவை நிறுவனத்தையும் டெக் மகேந்திரா(tech mahindra) நிறுவனம் சிடிசி (Ctc)என்ற நிறுவனத்தை 280 மில்லியன் டாலர்களுக்கும் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதே போல கேப் ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களும் கூட பொறியியல் சேவை நிறுவனங்களை வாங்கியுள்ளன.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பொறியியல் துறை சார்ந்த ஆய்வு மற்றும் மேம்பாடு மூன்று மடங்கு வளர்ச்சி அடையும் என நம்புவதாக இஐஐஆர் ட்ரெண்ட் (Eiir trend) நிறுவனத்தின் தலைவரான பரிக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி துறை எப்படி வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக இருந்ததோ தற்போது இன்ஜினியரிங் அதாவது பொறியியல் சேவை சார்ந்த துறைகள் அந்த இடத்தில் இருக்கின்றன. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பொறியியல் சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாக உருவாகி இருக்கும் எனவே தான் ஐடி நிறுவனங்கள் தற்போது இவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன என கூறுகிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications