ஜனவரி 26 ஆம் தேதி இந்தியர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள். ஏனெனில் அன்று தான் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் குடியரசு தின நாளை ஏன் கொண்டாடுகிறோம்? ஏன் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வரலாறு என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1947-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று இந்தியா இறுதியாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனாலும் இந்த சுதந்திரம் இந்தியாவிற்கு ஒரு குடியரசு அந்தஸ்தை வழங்கவில்லை. 200 வருஷமாக போராடி சுதந்திரத்தை பெற்றாலும், குடியரசு உரிமை பெறப்படவில்லை.

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவது ஏன்?: ஜனவரி 26-ஆம் தேதி தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதனால் தான் ஜனவரி 26-ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். ஒரு சுதந்திர நாடாக செயல்பட, நமக்கென்று ஒரு அரசியலமைப்பு தேவைப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகுதான் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெற்றது. இருந்தாலும் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தது பூர்ண ஸ்வராஜ்.
சுதந்திரப் போருக்கு பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் பலமாக இருந்தபோது இந்தியர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. சில அநீதிகள் நடக்கத் தொடங்கின. அதோடு அரசியல் சுதந்திரமும் பறிபோனது. இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அகிம்சை மற்றும் சத்தியாகிரகம் போன்ற வழிகளில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வந்தது.
இதனால் 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பூர்ண ஸ்வராஜை அறிவித்தது. அதாவது வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
அரசியலமைப்பு என்றால் என்ன?: அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டிற்கு ஆன்மா போன்றது. ஏனெனில் இதில் நாட்டின் அடிப்படைச் சட்டங்கள் இருக்கும். தனி மனிதருக்கு தேவையான கருத்துரிமை, வாக்களிக்கும் உரிமை, கல்வி, சுதந்திரம் தனிமனித சுதந்திரம் போன்ற அனைத்து உரிமைகளையும் ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அவை சிக்கல்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் உலகிலேயே மிகவும் விரிவான அரசியல் அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து சட்டங்களும் இதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தியாவில் பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்ட நாடு. இந்த பல்வேறு தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையாக சொல்லப்போனால் அனைத்து சட்டங்களும் அடங்கிய ஒரு சட்டப் புத்தகம் தான் அரசியலமைப்பு.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications