இந்தியாவில் விமான சேவை வழங்கும் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், முதலில் 1993 இல் நிறுவப்பட்டது. பிரீமியம் விமானப் பயணச் சேவைகளுக்காக பிரபலமானதாக மாறியது ஜெட் ஏர்வேஸ், 124 விமானங்கள் மூலம், உலகளவில் 65 இடங்களுக்கு சேவை வழங்கியது.
ஆனால் 2019ஆம் ஆண்டில் கடன் மற்றும் வங்கி மோசடிகளால் நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது. அதனைத்தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ரூ.350 கோடிக்கு ஜலான் கால்ராக் கன்சோர்டியம் (JKC) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஜெட் ஏர்வேஸை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ள ஜேகேசி நிறுவனம் இது தொடர்பான தீர்வினை தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அதனை தேசிய நிறுவன தீர்ப்பாயமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தீர்வு அமலுக்கு வரும் போது முதலீட்டாளர்களின் தங்களின் 99% பணத்தை இழப்பார்கள்.
ஜெட் ஏர்வேஸின் மறுசீரமைக்கப்பட்ட நிறுவனத்தில், வெளியேறும் பொது பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு நூறு பங்குகளுக்கும் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படும் என தீர்வு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த தீர்வு திட்டத்திற்கு தேசிய நிறுவன தீர்ப்பாயம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மதிப்பு கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் 11 % அதிகரித்துள்ளது. தற்போதைக்கு ஜெட் ஏர்வேஸின் ஒரு பங்கின் மதிப்பு 47 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதன் சந்தை மூலதனம் 539 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிறுவனம் மறுசீரமைக்கப்படுவதால் முதலில் புரமோட்டர்கள் வசம் இருக்கும் ஈக்விட்டி பங்குகள் மற்றும் முன்னுரிமை பங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். கிட்டதட்ட 8.51 லட்சம் பங்குகள், அதாவது 75% பங்குகள் இவ்வாறு ரத்து செய்யப்படும்.
மீதமுள்ள 25% பங்குகள் பொது பங்குதாரர்களிடம் உள்ளது. அதாவது 2.83 லட்சம் பங்குகள், இவற்றின் முக மதிப்பு 10 ரூபாயில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டில் 99% ஐ இழக்க உள்ளனர்.
புதிய நிறுவனமாக செயல்பட தொடங்கிய உடன் இந்த பங்குகளின் முக மதிப்பு ஒரு பங்கிற்கு 10 ரூபாய் என மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகைய ஒருங்கிணைப்பை தொடர்ந்து பங்குகளுக்கான ஈக்விட்டி பங்குகளுக்கான ஏதேனும் பகுதி அளவு உரிமைகள் அருகில் உள்ள முழு எண்ணாக மாற்றப்படும்.
ஜேகேசி, மறுசீரமைக்கப்பட்ட நிறுவனத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான புதிய மூலதனத்தை ஒரு பங்குக்கு 50 ரூபாய் என்ற விலையில் செலுத்தும். கூடுதலாக தொழிலாளர் மற்றும் ஊழியர் பங்களிப்பு மற்றும் கடன் வழங்கினரின் கடன் ஆகியவை பங்குகளாக மாற்றப்படும்.
இவ்வாறு மொத்தம் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு புதிய புரமோட்டர்களின் பங்குகள் ஒரு வருடத்திற்கு லாக் செய்யப்பட்டிருக்கும். ஜெட் 2.0 புதிய நிறுவனத்தின் பங்குகள் 18 மாதங்களுக்குள் 10% மற்றும் 3 ஆண்டுகளுக்குள் 25% ஆக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications