கோயம்புத்தூர்-ல் டிபென்ஸ் தொழிற்பூங்கா நிலை என்ன..? வந்தது முக்கிய அப்டேட்..!!

கோவை: தமிழ்நாட்டில் பாதுகாப்பு துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் மையமாக கோவையை மாற்றும் பொருட்டு அங்கே இரண்டு தொழிற்பூங்காக்களை தமிழக அரசு அறிவித்தது. அதன் தற்போதைய நிலவரம் என்ன..?

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ-விடம் உள்ளது. இந்த நிறுவனம் கோவை மாவட்டத்தில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.

கோயம்புத்தூர்-ல் டிபென்ஸ் தொழிற்பூங்கா நிலை என்ன..? வந்தது முக்கிய அப்டேட்..!!

முதல்கட்டமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோவை மாவட்டம் வாரப்பட்டி பகுதியில் 350 ஏக்கரில் பாதுகாப்பு தொழிற்சாலைகளை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இங்கே ஆலைகளை அமைப்பதற்கான விண்ணப்பங்களை தொழில்நிறுவனங்கள் வழங்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்த வகையில் வாரப்பட்டியில் பாதுகாப்புத் துறை தொழிற்பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிடப்பட்டுள்ள 350 ஏக்கரில் தற்போது வரை 100 ஏக்கர் இடங்களை ஒதுக்குவதற்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள இடங்களுக்கு விண்ணப்பம் அளிப்பதில் நிறுவனம் சற்றே தயக்கம் காட்டுவது தெரிய வந்துள்ளது. கோவையில் சரியான விலையில் நிலங்கள் கிடைப்பது சவாலாக உள்ளது என்கின்றனர் இங்கே செயல்படும் எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

கோவையில் தொழில் தொடங்க குறிப்பாக தொழிற்பூங்காவில் முதலீடு செய்ய ஆர்வம் இருந்தாலும் நிலத்தின் விலை உள்ளிட்ட சவால்கள் அதை தடுத்து விடுகின்றன என கூறுகின்றனர். கோவையில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட தொழில் பூங்காவை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது ஒன்று வாரப்பட்டி மற்றொன்று சூலூர்.

கோயம்புத்தூர்-ல் டிபென்ஸ் தொழிற்பூங்கா நிலை என்ன..? வந்தது முக்கிய அப்டேட்..!!

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ளதை போன்ற பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள் கோவையில் இல்லாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.


அரசு இங்கே தொழில் செய்ய வரும் நிறுவனங்கள் விரைவாக நிலங்களை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இதன் மூலமே அரசு நினைத்தபடி இந்த இடம் பெரிய தொழில் பூங்காவாக மாறும் எனவும் எம்.எஸ்.எம்.ஈ துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+