15 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சிக்கல்!! ஐடி நிறுவனங்களில் நடக்கும் மேஜர் மாற்றம்..!

ஏஐ தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் செயல்படும் போக்கையே மாற்றி அமைத்து விட்டது. இது இந்திய ஐடி நிறுவனங்களில் வலுவாக எதிரொலித்துள்ளது.

உலகளவில் பெரும்பாலான சேவைகள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே ஐடி நிறுவனங்கள் அதற்கு ஏற்ற வகையில் தங்களுடைய தயாரிப்புகளை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது . இது தவிர தங்களுடைய வேலையிலேயே ஏஐ செயலிகளின் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கின்றன. இது இந்தியாவை சேர்ந்த 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

15 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சிக்கல்!! ஐடி நிறுவனங்களில் நடக்கும் மேஜர் மாற்றம்..!

இந்தியாவை சேர்ந்த 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் பெரிய ஐடி நிறுவனங்களில் வேலை பெறுவது என்பது இனி அத்தனை எளிதான விஷயமாக இருக்காது. பொதுவாக ஐடி நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கிறது என்றால் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பாரம்பரியமாக இந்திய ஐடி நிறுவனங்கள் ஆண்டுதோறும் தன்னுடைய ஒவ்வொரு 9000 ரூபாய் வருவாய் உயர்வுக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையில் 30 பேரை அதிகரிக்கும் . ஆனால் ஏஐ பயன்பாடு அதிகரித்து விட்டதால் இந்த ஊழியர்கள் எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது.

ஐடி நிறுவனங்களில் கோடின்ங், கஸ்டமர் சப்போர்ட் மற்றும் அப்ளிகேஷன் மெயின்டனன்ஸ் ஆகிய வேலைகளிலிருந்து மனிதர்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஏஐ தொழில்நுட்பம் அவற்றை செய்யத் தொடங்கிவிட்டது . டிசிஎஸ் போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய ப்ராஜெக்ட் டெலிவரி மாடலில் ஏஐ சார்ந்து பெரிய அளவில் மாறி இருப்பதாக தெரிவிக்கின்றன.

பொதுவாக நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது என்றால் ஐடி சேவைக்கான தேவை அதிகரிக்கிறது, நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கிறது என்பது தான் இதுவரை இருந்த நிலைமை. ஆனால் இனி ஐடி நிறுவனங்களின் வருவாய் அதிகரித்தாலும் ஊழியர்கள் எண்ணிக்கை என்பது அதிகரிக்காது. ஏனெனில் அந்த இடத்தை தான் தற்போது ஏஐ நிரப்பி விட்டது .

15 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சிக்கல்!! ஐடி நிறுவனங்களில் நடக்கும் மேஜர் மாற்றம்..!

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் தான் முதன் முதலில் இந்த தகவலை வெளியிட்டது. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் நிறுவனத்தின் வருமானம் 5 சதவீதம் உயர்ந்திருக்கிறது, ஆனால் ஊழியர்கள் எண்ணிக்கை உயரவில்லை என தெரிவித்திருக்கிறது. அதாவது நிறுவனம் செயல்படும் முறை மாறி இருக்கிறது என கூறுகிறது.

தற்போது ஐடி நிறுவனங்களின் வருவாய் வேகமாக அதிகரிக்கிறது, ஆனால் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் ஏஐ தான் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் ஆய்வாளரான அபிஷேக் பக்கர் தெரிவிக்கிறார். காக்னிசண்ட் நிறுவனமும் இதே போன்ற ஒரு தகவலை தான் வெளியிட்டு இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களில் அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அதிக ப்ராஜெக்ட் இருந்தது என அர்த்தம் ஆனால் தற்போது அந்த சமநிலை மாறிவிட்டது என நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிக்குமார் கூறுகிறார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆர்த்தி சுப்ரமணியனும் ஐடி நிறுவனங்கள் பிசினஸ் மாடல் படிப்படியாக மாறி வருகிறது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு அடித்தளம் தான் தற்போது உருவாகியிருக்கும் மாற்றம் என கூறியிருக்கிறார். இதற்கு முன்பு ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய ப்ராஜெக்ட்டில் எத்தனை பேர் வேலை செய்கிறார்களோ அதை அடிப்படையாகக் கொண்டுதான் ப்ராஜெக்ட் கட்டணத்தை நியமிக்கும், ஆனால் தற்போது ஐடி நிறுவனங்கள் அந்த குறிப்பிட்ட ப்ராஜெக்ட்டின் பிசினஸ் அவுட்கம் அடிப்படையில்தான் கட்டணத்தை நிர்ணயம் செய்கின்றன.

ஆனால் இந்த மாற்றம் இந்தியாவில் தற்போது இருக்கக்கூடிய 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உகந்தது அல்ல. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்து விடுமா என்ற இவர்கள் அனைவரும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் இந்த ஐடி நிறுவனங்கள் மனிதர்களுக்கு மாற்றாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. எனவே தற்போது பொறியியல் படிக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய கல்லூரி படிப்போடு சேர்ந்து ஏஐ சம்பந்தப்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துக்கொண்டு வேலைக்கு தயாராவது தான் வேலைவாய்ப்பை உறுதி செய்யும். வெறும் பட்டப்படிப்பு மட்டும் இல்லாமல் வேலைக்கு தயாரானவர்களாக தங்களை வைத்திருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+