சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக குழந்தைகள் பிறப்பு விகிதம் 9 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தைகள் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு 8, 42,412 ஆக இருக்கிறது. 2024க்கு முன்பு வரை இருந்த கடைசி ஐந்தாண்டு காலத்தில் குழந்தைகள் பிறப்பு
விகிதம் 9 லட்சம் என்ற எண்ணிக்கைக்கு மேலே இருந்தது.
முதன்முறையாக அந்த எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9 ,02,306 ஆக இருந்து 2024இல் 6.6% குறைந்து 8,42,412 என சரிவடைந்துள்ளது. முந்தைய ஆண்டு மாநிலத்தின் மொத்த குழந்தைகள் பிறப்பு விகிதம் 11.7 ஆக இருந்து 2024 10.9 என குறைந்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்த விவரங்கள் வெளி வந்துள்ளன.

தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்நாளில் குழந்தைகள் பிறக்கும் சராசரி விகிதம் Total Fertility Rate என கணக்கீடு செய்யப்படுகிறது. அதுவும் 1.4 என குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் எல்லாம் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்து வருகிறது. அதே போக்கையே தற்போது தமிழ்நாட்டில் காண முடிகிறது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
2024இலும் இந்த விகிதம் கணிசமான அளவு குறைந்து இருப்பதை நாம் காண முடிகிறது என்றும் அடுத்த சில மாதங்களில் ஆண்டு அறிக்கை வெளிவந்துவிடும் அதில் முழுமையான தரவுகள் நமக்கு தென்பட்டு விடும் என தெரிவித்துள்ளார். குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது எனும்போது பிற்காலத்தில் வயதான மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். வயதான மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களை பராமரிப்பதற்கான செலவினங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில் நாட்டில் வேலை செய்யும் வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
வேலூரில் செயல்பட்டு வரக்கூடிய சிஎம்சி கல்லூரியின் பேராசிரியர் ஜேக்கப் ஜான் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதன் விகிதம் குறைவு என்கிறார். தமிழ்நாட்டில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு காரணிகளே குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு காரணம் எனத்
தெரிவிக்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் இதே போன்ற ஒரு சூழல் ஏற்பட்டபோது அவர்கள் அதனை தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுத்தனர். தற்போது அங்கே முன்னேற்றங்களை நாம் காண முடிகிறது. அதேபோன்ற ஒரு நடவடிக்கையை தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என ஜேக்கப் ஜான் குறிப்பிடுகிறார்.
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்றால் பின்னாளில் இது பிரச்சினையாக முடியும் எனக் கூறியுள்ளார். தற்போது சுகாதார வசதிகள் அதிகரித்து விட்டதால் மக்களின் வாழ்நாள் காலம் அதிகரித்து விட்டது. எனவே எதிர்காலங்களில் மக்களின் ஆயுள் கூட போகிறது அதாவது வயதான மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்க போகிறது, தற்போது குழந்தை பிறப்பு வீதமும் குறைந்துவிட்டால் அரசுக்கு இது பெரிய சவாலாக மாறிவிடும்.
எனவே இதனை எதிர்கொள்ள ஏதுவான நடவடிக்கைகளை தற்போது இருந்தே அரசு தொடங்க வேண்டும் என்று அறிவுரையும் அவர் வழங்குகிறார்.
Story Written By: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications