அமெரிக்கா ஈரான் போர் பதற்றத்தின் காரணமாக கேஸ் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பெட்ரோலிய அமைச்சகம், OMC நிறுவனங்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் எல்லாம் பிஎன்ஜி எனப்படும் குழாய் மூலம் ஏறியக்கூடிய எரிவாயு சப்ளை இருக்கிறதோ, அந்த இடங்களில் கட்டாயம் மக்கள் அதை பயன்படுத்தும் வகையில் அறிவிப்புகளை அனுப்புமாறு உத்தரவிட்டிருக்கிறது.
சுமார் 3 மாதத்திற்கும் மேலாக ஈரான் ஹர்மோஸ் ஜலசந்தியை மூடி வைத்திருக்கிறது. இதன் வழியாகத்தான் கேஸ் சப்ளை உலக அளவில் நடைபெறுகிறது. இந்தியாவில் நிலைமை கைமீறி போகவில்லை என்றாலும், ஆங்காங்கே இன்னும் தட்டுப்பாடு நிலவ தான் செய்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே 21 நாட்களுக்கு ஒரு முறை செய்யப்பட்ட புக்கிங் தற்போது 45 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வந்தாலும், போர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
இதனால் இனிவரும் நாட்களில் இந்த தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்தப் பாதையின் வழியாகத்தான் கச்சா எண்ணெயில் 40%, எல்என்ஜி இறக்குமதியில் 60%, எல்பிஜி இறக்குமதியில் 90 சதவீதமும் இந்தியாவை வந்தடைகிறது. இந்தியாவில் சப்ளை செய்யப்படும் சுமார் 60 சதவீத எல்பிஜி சிலிண்டர்கள் வெளியூரிலிருந்தே வருகிறது.

அதிலும் 90 சதவீதம் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் நாடுகளில் இருந்து ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்படுகிறது. இந்த முக்கிய பாதை மூடப்பட்டுள்ளதால் வேறு சில நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
இதையடுத்து பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஓஎம்சி நிறுவனங்கள் மற்றும் சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர்கள் இணைந்து இரண்டு அறிவிப்புகளை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அவருடைய உத்தரவின் பேரில் 2 பிரிவினருக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட உள்ளது. இன்னும் சில குடும்பங்கள் பிஎன்ஜி எரிவாயு இணைப்பு இருந்தும், தொடர்ந்து எல்பிஜி சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றன. இது போன்ற குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டரை ரத்து செய்யக்கோரி அறிவிப்புகளை அனுப்ப வேண்டும்.
இரண்டாவதாக தங்கள் பகுதியில் பிஎன்ஜி வசதி இருந்தும் தொடர்ந்து எல்பிஜி பயன்படுத்தும் நுகர்வோருக்கு அறிவிப்பு வழங்க வேண்டும். இந்தியா வெகுவாக எல்பிஜி இறக்குமதியை சார்ந்திருக்கிறது. இதை குறைக்கவும் மக்களை எல்பிஜி-யிலிருந்து பிஎன்ஜி-க்கு மாற்றுவதற்காகவும் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
பிஎன்ஜி பெற அறிவுறுத்தப்பட்டாலும், LPG சப்ளையை சமாளிப்பதற்காக இந்தியா உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போர் பிரச்சனை தொடங்கியதில் இருந்து எல்பிஜி உற்பத்தி 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 32,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இப்போது 52,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விநியோகத்திற்கு அரபு நாடுகளை மட்டும் சார்ந்திருக்காமல் அமெரிக்கா கனடா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளில் இருந்தும் இந்தியா இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.
இப்படி பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அரசுக்கு ஏகப்பட்ட செலவுகள். அதை ஈடு செய்யும் வகையில் கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாயும், ஜூன் மாதம் 29 ரூபாயும் அதிகரித்தது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 942 ரூபாயாக இருக்கிறது. இதில் உணவகங்கள் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கமர்சியல் சிலிண்டரின் விலை ரூ. 3113.50 ஆக இருக்கிறது.
அவ்வப்போது கேஸ் விலையை அதிகரித்தும், OMC நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும் ரூ.690 நஷ்டத்தை சந்தித்து வருவதாக கடிதத்தில் நீரஜ் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications