சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த 2023 ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆகஸ்டில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்தை பொருத்தவரை உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் இரண்டு டெர்மினல்களிலும் மொத்தமாக 18, 53, 115 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுவே 2023 ஆகஸ்ட் மாதத்தில் 17, 53,115 பயணிகள் என இருந்தது. அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் இது 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூர் விமான நிலையத்தை பொருத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் அங்கே 2,70,013 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2, 53, 814 ஆக இருந்தது. அதாவது கடந்தாண்டை விட நடப்பாண்டில் இது 6.1 சதவீதம் அதிகம். திருச்சி விமான நிலையத்திலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 17.9% உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் 1, 43,014 பேர் பயணம் செய்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் 1,68,668 என அதிகரித்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு விட நடப்பாட்டில் கூடுதலாக 2,711 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சதவீத அடிப்படையில் பார்க்கும்போது இது 16.4 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் மதுரை விமான நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,14,048 பேர் பயணம் செய்திருந்த நிலையில் நடப்பு ஆண்டில் அது 1,08,944 என குறைந்துள்ளது. இது 4.8% குறைவு என தெரிய வருகிறது. சேலம் விமான நிலையத்தை பொருத்தவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அது செயல்பாட்டில் இல்லை. நடப்பாண்டில் இந்த விமான நிலையத்தை சுமார் 10 , 994 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது கவலை தருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு சர்வதேச விமான போக்குவரத்தில் 4,94,796 பேர் பயணம் செய்த நிலையில் நடப்பாண்டில் அது 4,86,177 என குறைந்துள்ளது. அதாவது 1.8% என சரிவை கண்டுள்ளது. இதற்கு சர்வதேச விமானங்களுக்கான டெர்மினலில் கஸ்டம் துறையில் இருக்கும் பிரச்னைகளும், ஆய்வு நடத்துவதில் இருக்கும் தாமதமுமே காரணமாக சொல்லப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications