சர்வதேச அளவில் சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. அதில் பலருக்கும் விருப்பமானதாக மக்கானா எனப்படும் தாமரை விதைகள் இடம்பிடித்துள்ளன. எனவே மக்கானா எனப்படும் தாமரை விதைகளுக்கான சந்தை பிரகாசமாக இருக்கிறது.
இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட்டின் பீகார் மாநிலத்தில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அண்மையில் ஜெரோதா துணை நிறுவன நிகில் காமத் இந்தியாவில் தாமரை விதை தொடர்பான தொழிலுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினர்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், சர்வதேச அளவில் மக்கானாவிற்கான தேவை அதிகரித்துள்ளது என கூறினார்.

கூடிய விரைவில் 6000 கோடி மதிப்புள்ள சந்தையாக மக்கானா சந்தை மாறும், அதனை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய பிராண்டினை உருவாக்கினால் அது சிறந்த வளர்ச்சி பெறும் என அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் ஒரு கிராபிக்ஸையும் தன்னுடைய பதிவில் இணைத்திருந்தார். அதில் இந்தியாவில் தற்போது மக்கானா தொழிலின் மதிப்பு 3000 கோடி ரூபாயாக உள்ளது அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இது 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள துறையாக மாறும் என கூறியிருந்தார்.
ஆண்டுதோறும் மக்கானா ஏற்றுமதி 25 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது என தெரிவித்த அவர், இதில் சிறந்த தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என கூறியிருந்தார். இந்த நிலையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் மக்கானா உற்பத்தி மற்றும் விற்பனை, சந்தைப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் மக்கானா உற்பத்தி அதிகமாக இருப்பதால் அங்கே இதற்கான வாரியம் அமைக்கப்படுகிறது. இந்தியா மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் சத்தான ஒரு தின்பண்டமாக மக்கானா விதைகள் பார்க்கப்படுகின்றன. இதில் புரதச்சத்து , நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் , பாஸ்பரஸ் உள்ளிட்டவை இருப்பதால் உடல் நலத்திற்கு இது மிகவும் உகந்தது என தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக இது குறைந்த கலோரி கொண்டதால் உடல் எடை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் கட்டாயமாக இதனை உணவில் உட்கொள்ளலாம் என தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. சத்துகள் நிறைந்தது என்பதால் வெளிநாட்டவர்கள் பலரும் இதனை விரும்பி உண்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட வாரியம் தொடர்பான அறிவிப்பு இந்தியாவில் இந்த தொழிலை மேலும் ஊக்கவிக்க இருக்கிறது. நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ள இந்த தொழிலை பீகார் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
Story written-devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications