இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் கார்களிலேயே பரவலாக பயன்படுத்தக்கூடிய ஒரு மாடலாக இருப்பது ஸ்விஃப்ட் (SWift) மாடல் கார்கள் தான். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இந்த மாடல் கார்கள் இந்திய சாலைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த 19 ஆண்டுகளில் மட்டும் 25 லட்சம் ஸ்விஃப்ட் கார்களை செய்திருக்கிறது மாருது சுசூகி நிறுவனம். இந்த நிலையில் புதிய அப்டேட்களுடன் நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது மாருதி சுசூகி நிறுவனம்.

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான ஹேட்ச்பேக் மாடல் என்றால் அது ஸ்விஃப்ட் தான். அதில் நான்காம் தலைமுறை அப்டேட் ஆக வெளிப்புறமும், உட்புறமும் பல்வேறு டிசைன் மாற்றங்களோடு. புதிய இன்ஜினையும் சேர்த்து அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி நிறுவனம்.
அண்மை காலமாக எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கும் போது மாருதி சுசூகி ஏன் மீண்டும் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்கிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சந்தையில் மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் மாடல் கார், பல நிறுவனங்களின் எஸ்யூவி ரக கார்கள், ஏன் மாருதியின் சொந்த எஸ்யூவி கார்களுடனே போட்டிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மாருதியின் ஸ்விஃப்ட் மாடல் கார், நிஷானின் மேக்னெட் (Nissan - Magnet), ஹூண்டாயின் எக்ஸ்ட்ரா (Exter) மற்றும் மாருதியின் சொந்த மாடலான பிரான்க்ஸ் (Fronx) ஆகியவற்றுடன் போட்டியிட வேண்டியது இருக்கும்.
இந்தியாவில் எஸ்யூவி கார்கள் பலராலும் விரும்பி வாங்க கூடிய கார்களாக உள்ளன. இதன் காரணமாகவே ஹேட்ச் பேக் கார்களுக்கான தேவை என்பது சந்தையில் குறைந்து விட்டது. மாருதி சுசூகி நிறுவனமே கூட எஸ்யூவி வகை கார்களில் தான் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஹேட்ச் பேக் கார்கள் மீண்டு வர சில காலம் தேவைப்படும் என்ற நிலை தான் சந்தையில் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
விலை அடிப்படையில் ஒப்பீடு செய்தால் கூட தற்போதுள்ள மாருதி ஸிப்ஃடின் விலை 6.25 முதல் 9.25 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. நிஷானின் மேக்னைட்(Magnate) மற்றும் ரெனால்ட் கைகர்(Kiger) ஆகியவை 6 முதல் 11 லட்சம் வரையிலேயே கிடைக்கின்றன.
மாருதி பிரான்க்ஸ் (fronx) ரக கார்களின் விலையும் 7.50 முதல் 13 லட்சம் என்ற அளவில் இருக்கின்றன. எனவே விலை அடிப்படையிலும் ஸ்விஃப்ட் ரக கார்கள் பெரிய போட்டியை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் மாருதி தைரியமாக ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்டை அறிமுகம் செய்வதற்கு முக்கிய காரணம், இதன் பிராண்ட் வேல்யூ. ஸ்விஃப்ட் கார்களுக்கான பெயரும் புகழும் அப்படியே இருக்கிறது, இந்த பெயரே காரை பெருமளவில் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்து விடும் என நம்புகிறது மாருதி சுசூகி நிறுவனம்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications