இந்திய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல் துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சந்தையில் தனது மதிப்பை உயர்த்த ஹூண்டாய் உட்பட அனைத்து நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி, நான்காம் தலைமுறை டிசையர் சப்-காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் டிசையர் காரின் விலை ரூ.6.79 லட்சம் முதல் ரூ.10.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொகைக்கு மத்தியில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய பயணிகள் வாகன சந்தையில் சப்-காம்பேக்ட் செடான் பிரிவு கடந்த சில ஆண்டுகளாக விற்பனை குறைந்து வருகிறது. இந்தியாவில் எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் செடான் காரை மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ளது. அதற்கு முக்கியமான காரணமும் உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை வலிமையை பார்த்தால் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பு கொண்ட கார் தான் அதிகம், இந்த நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் சமீப காலமாக எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில் டிசையர் கார் மூலம் செடான் சந்தையையும், பட்ஜெட் பிரிவையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் கார்களின் ஆரம்பக்கட்ட விலை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் 10 லட்சம் கீழான விலை பட்டியலில் இதை பிட் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தான் காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசூகி டிசையர் கார் அறிமுகம் மூலம் தற்போது ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகார் போன்ற கார்களுடன் போட்டிப்போட உள்ளது. இதேபோல் இந்த ஒரு கார் வைத்து மாருதி சுசூகி தனது 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் பிரிவின் விற்பனையை புத்துயிர் அளிக்கும் முடிவுடன் அறிமுகம் செய்துள்ளது.
புதிய டிசையர் கார் ஒரு பட்ஜெட் காராக இருந்தாலும், பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளது, இதில் முக்கியமான ஒன்றாக அதன் சிறப்பான பாதுகாப்பு தரமாகும். இது குளோபல் என்கேஏபி சோதனையில் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. முதல் முறையாக மாருதி கார் 5 ஸ்டார் ரேட்டிங்-ஐ பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே கார் வைத்து பல இலக்குகளை அடைய உள்ளது மாருதி சுசூகி.
மாருதி சுசூகி-யின் இந்த புதிய டிசயர் கார் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய 1.2-லிட்டர் Z-series பெட்ரோல் இன்ஜின் உள்ளிட்ட பல அப்டேட்களுடன் வந்துள்ளது. இந்தியாவில் காம்பேக்ட் செடான் பிரிவில் மாருதி டிசயர் கார் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக அமைகிறது. இந்த காரில் ஆறு ஏர்பேக், 360 டிகிரி HD கேமரா, ABS உடன் EBD, TPMS மற்றும் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் வுட் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications