இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி திங்களன்று ஜூன் 2023 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் சுமார் 2.5 மடங்கு அதிகமாக உயர்ந்து 2, 485 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே ஜூன் காலாண்டில் 1,012.8 கோடி ரூபாய் லாபத்தை பெற்று இருந்தது. இதன் மூலம் தற்போது 2.5 மடங்கு அல்லது 145 சதவீத வளர்ச்சியை லாபத்தில் உயர்வை சந்தித்துள்ளது. இதேபோல் மாருதி சுசூகி நிறுவனத்தின் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 22% உயர்ந்து 32, 327 கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளது மாருதி சுசூகி.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி ஜூன் காலாண்டில் மொத்தம் 498,030 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை காட்டிலும் 6.4% அதிகமாகும், உள்நாட்டு சந்தையில் மாருதி சுசூகியின் கார் விற்பனை ஆண்டுக்கு 9% அதிகரித்து 4,34,812 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியில் 9% குறைந்து 63,218 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஜூன் காலாண்டில் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் பற்றாக்குறையால் 28,000 வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது என்று காலாண்டு நிதியியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மாருதி சுசூகி நிலுவையில் உள்ள வாடிக்கையாளர் ஆர்டர்கள் காலாண்டின் முடிவில் 3,55,000 ஆக உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்த தடாலடி லாப உயர்வுக்கு முக்கியான காரணம் மிகப்பெரிய விற்பனை அளவுகள், செலவுகளை பெரிய அளவில் குறைத்தது, பிற முக்கிய வருமானத்தின் வாயிலாக 2 மடங்கு லாபம் உயர்ந்து 2,485 கோடி ரூபாய் அளவில் உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் 1.6 சதவீதம் உயர்ந்து தேசிய பங்குச்சந்தையில் 9821 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications