ஊதிய உயர்வை குறைத்த MNC நிறுவனங்கள்.. என்ன காரணம்?

டெல்லி: இந்தியாவில் இயங்கி வரக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு பெரிய அளவிலான ஊதிய உயர்வை வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஜனவரி முதல் டிசம்பர் என்ற கேலண்டரில் தான் இயங்குகின்றன. எனவே ஊதிய உயர்வு , பதவி உயர்வு ஆகிய அறிவிப்புகளை ஜனவரியில் தான் வெளியிடும். இந்நிலையில் டெல்லாய்ட் நிறுவனம் பன்னாட்டு நிறுவன ஊழியர்களிடம் ஆய்வு நடத்தி அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

ஊதிய உயர்வை குறைத்த MNC நிறுவனங்கள்.. என்ன காரணம்?

இது தொடர்பாக எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த ஆண்டு ஊழியர்களுக்கு 9 சதவீதத்திலிருந்து ஊதிய உயர்வு வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் அதனை 8.8 சதவீதம் என குறைத்துவிட்டன.

மேலும் பெரிய அளவிலான ஊதிய உயர்வு வழங்குவதை பன்னாட்டு நிறுவனங்கள் தவிர்த்து இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை ஏற்படலாம் என்ற ஒரு சூழல் நிலவுவதே பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்த விகிதத்தில் ஊதிய உயர்வு அளித்ததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

அதே வேளையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளன. அதாவது ஜிசிசி மையங்கள் 9.1 சதவீதம் வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட நூறு நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவு இருக்காது என தெரியவந்துள்ளது. அண்மையில் தான் இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் தங்களுடைய ஜூனியர் நிலையிலான ஊழியர்களுக்கு பகுதியளவு ஊதிய உயர்வு அறிவித்தது.

அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஜூனியர் நிலையிலான ஊழியர்கள் 1 முதல் 2 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு பெற்றனர்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதை தள்ளி வைத்துள்ளது. இவ்வாறு இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களும் இந்தியாவில் வந்து இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமலும் ,குறைந்த விகிதத்தில் ஊதிய உயர்வும் வழங்கி இருப்பது சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நிறுவனங்களும் இதனை பின்பற்றுமா என ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஆண்டை கணக்கில் கொண்டு தான் ஊதிய உயர்வு அறிவிப்புகளை வெளியிடும். எனவே இன்னும் இரண்டு மாதங்களில் அந்த நிலவரம் தெரிந்து விடும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+