தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஸ்மார்ட்போனும் ஒரு காரணம். ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள், புதுப்புது மாடல்களைத் தொடர்ந்து வெளியிடுகிறது. புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் வெளியானால் போதும் ஸ்மார்ட் போன் பிரியர்கள் உடனே அதனை சென்று வாங்கி விடுவார்கள். ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது யாரும் மொபைல் இன்சூரன்ஸ் பற்றி யோசிப்பதே இல்லை. இந்தப் பதிவில் மொபைல் இன்சூரன்ஸ்-இன் முக்கியத்துவதைப் பற்றிப் பார்ப்போம்.
மொபைல் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமானது. உதாரணமாக உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ மொபைல் இன்சூரன்ஸ்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொபைல் இன்சூரன்ஸ் என்றால் என்ன?: மொபைல் இன்சூரன்ஸ் என்பது மொபைல் ஃபோன்களுக்கான பாலிசியாகும். நீங்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை வாங்குகிறீர்கள்.. என்றால், இந்த காப்பீடு உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் மொபைல் போனை நீங்கள் இழந்துவிட்டாலோ அல்லது அந்த மொபைல் சேதமடைந்தாலோ, இது உங்களுக்கு பயனளிக்கும். நீங்கள் மொபைல் போனை வாங்கும் பொழுது கூடுதல் பணம் செலுத்தி இந்த இன்சூரன்ஸ் பெற வேண்டும்.
திருட்டு பாதுகாப்பு: உங்களுடைய மொபைல் திருடப்பட்டு விட்டால், அதனைக் கண்டறிவது மிகவும் கடினம். போலீசாரிடம் புகார் கொடுத்தால் சில சமயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நீங்கள் அந்த மொபைல் போனை திரும்ப பெற முடியவில்லை என்றால் இந்த இன்சூரன்ஸ்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் உங்களால் புது மொபைலை வாங்க முடியும்.
தற்செயலாக உடைந்தால்: மொபைல் போன் தவறுதலாக கீழே விழுந்து உடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதனை பழுது பார்க்க வேண்டி இருக்கும். விலை உயர்ந்த மொபைல் போன்களை பழுது பார்ப்பதற்கு பணம் அதிகம் தேவைப்படும். இதுபோன்ற நேரங்களில் இன்சூரன்ஸ்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும். மொபைல் போன் தண்ணீரில் விழுந்து சேதம் அடைந்தாலும், இந்த இன்சூரன்ஸ்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பழுதுபார்க்க தேவைப்படும் செலவுகள்: ஆப்பிள், சாம்சங் மற்றும் 1பிளஸ் போன்ற பிராண்டுகளின் ஃபோன்களை பழுதுபார்க்க அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். இதுபோன்ற செலவுகளை தவிர்ப்பதற்கு மொபைல் இன்சூரன்ஸ் உதவுகிறது.
தொலைந்த மொபைல்: வாரண்டிகளுடன் கொடுக்கப்படும் ஸ்மார்ட் மொபைல்கள் தொலைந்தால் எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படாது. ஆனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் இன்சுரன்ஸ்க்கு செலுத்திய தொகை திரும்பி தரப்படும்.
கீழே கொடுக்கப்படும் நிகழ்வுகளுக்கு மொபைல் இன்சூரன்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.
1. தொலைபேசியினை மர்மமான முறையில் தொலைந்துப் போதல்.
2. தீவிர வானிலை காரணமாக சேதம் அடைந்தால்
3. கவனக்குறைவால் திருட்டுப் போனால் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது.
4. தொலைபேசியின் உரிமையாளரைத் தவிர வேறு ஒரு நபர் அதனை உபயோகப்படுத்தும் போது சேதமடைந்தால் இன்சூரன்ஸ் பெற முடியாது.
5. தொலைபேசியில் ஏற்கனவே குறைபாடுகள் இருந்தாலும் இன்சூரன்ஸ் பெற முடியாது.
6. தொலைபேசியை வேண்டுமென்றே சேதப்படுத்தினாலும் இன்சூரன்ஸ் கிடைக்காது.


Click it and Unblock the Notifications