இந்தியா அமெரிக்கா இடையினான வர்த்தக மோதல் தீவிரமடைந்து இருக்கிறது. அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த செயல் இந்தியாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது .
அமெரிக்கா வரி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியாவிற்கு 50% வரி என டிரம்ப் கூறுகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் சீன நாட்டு அதிபர்களை சந்திக்க இருக்கிறார். அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 30ஆம் தேதி சீனாவிற்கு செல்கிறார். இரண்டு நாட்கள் அவர் சீனாவில் தங்கி இருப்பார் .

மோடி சீனா பயணம்: ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தான் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு செல்கிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஸீ ஜின் பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்டோரை சந்தித்து பேச இருக்கிறார். பிரதமர் மோடியே இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.
ரஷ்யா , சீனா அதிபர்களுடன் சந்திப்பு: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீதும் வர்த்தக போரை கொடுத்து இருக்கும் சூழலில் சீனாவில் நடைபெறக்கூடிய இந்த ஷாங்காய் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது . இந்தியா, சீனா, ரஷ்யா என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அனைவருமே இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த ஒரு கூட்டமாக இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் பார்க்கப்படுகிறது .முக்கியமாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீனாவின் அதிபர் ஸீ ஜின் பிங்கும் கலந்து கொள்வது டிரம்புக்கு ஒரு வலுவான தகவலை அளிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியா - சீனா உறவு: கடந்த 2020 ஆண்டு இந்தியா சீனா எல்லையில் கால்வன் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்து சீனா இந்தியா இடையிலான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகளும் ஒன்று சேர தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் மாதம் சீன அதிபர் இந்திய அரசுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் . அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பான இந்த கடிதத்தை தொடர்ந்து தான் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மீண்டும் மலர தொடங்கி இருக்கிறது .

7 ஆண்டுகளுக்கு பின் மோடி பயணம்: பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த ஜூலை மாதம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்று அதிபர் ஸீ ஜின் பிங்கை சந்திதார். கடந்த வாரம் சீன வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார் . இரு நாடுகளும் பரஸ்பரம் சமாதானமாகி உறவை புதுப்பித்து வருகின்றன.
டிரம்புக்கு பதிலடி: இந்தியா மீதான டிரம்பின் வரி விதிப்பை சீனா வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணம் அமைந்திருக்கிறது. 30 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி ஜப்பானிலிருந்து சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்கிறார். இந்த கூட்டத்தில் பிராந்திய பிரச்சினைகளை கடந்து வரி விவகாரம் குறித்து முக்கியமாக பேசப்படும்.
உலக அரசியலில் முக்கியத்துவம்: உலகமே உற்றுநோக்க கூடிய ஒரு மாநாடாக இது அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யா, சீனா மற்றும் தற்போது இந்தியா என மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்திக்கின்றனர் என்பதால் இது உலக அரசியலின் போக்கையே தீர்மானிக்கும் ஒரு மாநாடாக அமைய போகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications