இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐடி துறையில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் Mindtree என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கி இந்த நிறுவனங்களுக்கு ஈடாக வளர்ச்சி பெற செய்தவர் தான் சுப்ரோதோ பாக்ஸி (Subroto Bagchi). இந்திய ஐடி துறையின் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார் சுப்ரோதோ பாக்ஸி.
மைண்ட் ட்ரீ: 1999 ஆம் ஆண்டு சுப்ரோதோ பாக்ஸி மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் Mindtree என்ற ஐடி நிறுவனம். 2019ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை எல்&டி நிறுவனம் வாங்கியது. தற்போது இந்நிறுவனம் எல்டிஐ மைண்ட் ட்ரீ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. சுப்ரோதோ பாக்ஸியை பொறுத்தவரை எளிமையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து வந்து ஐடி நிறுவனத்தை தொடங்கி, தற்போது இந்திய பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

யார் இந்த சுப்ரோதா பாக்ஸி: சுப்ரோதோ பாக்ஸி ஒடிசா மாநிலத்தின் பட்னாகர் பகுதியில் 1957ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதில் இவரது வீட்டில் மின்சார இணைப்போ இவரது கிராமத்தில் குடிநீர் இணைப்போ தொடக்கப்பள்ளியோ கூட கிடையாது. இதனால் 8 வயது வரை முறையான கல்வி கிடைக்காமல் சிரமப்பட்டார். பின்னர் இவரது தாயாருக்கு புவனேஸ்வரில் ஆசிரியர் பணி கிடைக்கவே இவர்கள் குடும்பமாக அங்கே வந்துவிட்டனர். அப்போது தான் முதன்முதலில் இவர்கள் வீட்டில் மின்சார இணைப்பு கிடைத்ததாம்.
கிளார்க் வேலை: பள்ளிபடிப்பை முடித்து இவருக்கு உட்கல் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பை முடித்த அவர் ஒடிசா மாநில அரசில் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல தொடங்கினார்.
விப்ரோவில் வேலை: பின்னர் விப்ரோ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர் படிப்படியாக ஐடி துறை குறித்த அனைத்து விவரங்களையும் கற்றுக் கொண்டார் . விப்ரோ நிறுவனத்தின் உலக அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைமை அதிகாரி பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது . அந்த சமயத்தில் அசிம் பிரேம்ஜியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 1998 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறிய இவர் தன்னுடைய 9 நண்பர்களோடு இணைந்து மைண்ட் ட்ரீ என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கினார் .

மைண்ட் ட்ரீ நிறுவனம் தொடக்கம்: உலக அளவில் வேகமாக இந்த நிறுவனம் வளர்ச்சி பெற்றது. 2019 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாகவும் 20 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனமாகவும் மாறி இருந்தது . வழக்கமான ஒரு ஐடி நிறுவனமாக இல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் அங்கீகாரம் தரக்கூடிய அனைவருக்கும் மதிப்பு தரக்கூடிய ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் பாக்ஸி. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பெரிய வகையில் உதவியது. பின்னர் எல்&டி நிறுவனம் இந்த நிறுவனத்தை கைப்பற்றியது.
1 ரூபாய் சம்பளம்: பாக்ஸி 15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். அந்த பணத்திலும் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் என பல்வேறு மக்கள் நல பணிகளுக்காக தானமாக வழங்கி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்ஸியை ஒடிசா மாநில அரசு தங்களின் திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமனம் செய்தது. இதற்காக இவர் வாங்கிய சம்பளம் வெறும் 1 ரூபாய் தான்.
ஏன் 1ரூபாய்க்கு மதிப்பு அதிகம்: தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக இவர் வெளியிட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையில் எது மிகப் பெரிய செல்வம் தெரியுமா என்னைப் பொருத்தவரை இந்த ஒரு ரூபாய் தான் என ஒரு காசோலை புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். தான் ஒடிசா மாநில அரசின் ஆலோசகராக பணியாற்றிய பொழுது தனக்கு ஆண்டுக்கு 1 ரூபாய் சம்பளமாக ஒடிசா மாநில அரசு வழங்கியது.. 8 ஆண்டுகளுக்கு எட்டு காசோலைகள் எனக்கு வழங்கப்பட்டன இதுதான் கடைசியாக எனக்கு வழங்கப்பட்ட காசோலை என கூறியுள்ளார்.
சமூக நலன்: நான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் இந்த ஒரு ரூபாய்க்கு அது ஈடாகாது என அவர் பதிவு செய்திருக்கிறார். பாக்ஸியின் பொதுநல சேவைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த 8 ஆண்டுகளை கார்ப்பரேட் உலகில் செலவழித்திருந்தால் பல ஆயிரம் கோடி கிடைத்திருக்கும் ஆனால் அதனை விடுத்து மாநில வளர்ச்சிக்காக நேரத்தை ஒதுக்கி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் என எக்ஸ் பக்கத்தில் இவருடைய பதிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications