பொதுவாக காப்பீடு என வரும் போது நாம் தனி நபர்களுக்கு காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு ,வீட்டு காப்பீடு உள்ளிட்டவற்றை பற்றி தான் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் ஒரு மாநிலமே காப்பீடு பெற்றிருக்கிறது என்றால் நம்புவீர்களா ? இந்தியாவை சேர்ந்த நாகாலாந்து மாநிலம் தனக்காக காப்பீடு வாங்கி வைத்திருக்கிறது.
2018 ஆம் ஆண்டு நாகாலாந்து அரசுக்கு மிகக் கடுமையான ஒரு ஆண்டாக இருந்தது. ஏனெனில் அந்த மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு கன மழை பெய்தது. மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலமே மூழ்கும் நிலைக்கு சென்றது . கிட்டத்தட்ட 12 பேர் இதில் சிக்கி உயிரிழந்தனர். 538 கிராமங்கள் பாதிக்கப்பட்டன, 50000 குடும்பங்கள் செய்வதறியாமல் தவித்தன.

நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரை புவியியல் ரீதியாக அதிகப்படியான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த நிலை நீடித்ததால் அரசு தங்கள் மாநிலத்திற்கு என காப்பீடு பெறுவது என முடிவு செய்தது. இதன் மூலம் இந்தியாவிலேயே காப்பீடு பெற்ற முதல் மாநிலம் என்ற அந்தஸ்து நாகாலாந்துக்கு கிடைத்தது.
இதற்காக நாகலாந்து அரசு ஸ்விஸ் ரீ மற்றும் டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் கை கோர்த்தது. முதன்முறையாக ஒரு மாநிலத்திற்கு என காப்பீடு வழங்கும் போது பல்வேறு விஷயங்களையும் இந்த நிறுவனங்கள் கணக்கீடு செய்தன.
இதன்படி நாகலாந்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது இந்த நிறுவனங்கள் காப்பீடு தொகையை வழங்கும். சேட்டிலைட் தகவல்கள் மற்றும் மழை அளவீடுகள் அடிப்படையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை கடக்கும் போது அதனால் ஏற்படும் சேதங்களும் கணக்கீடு செய்யப்பட்டு காப்பீடு வழங்கப்படும் என ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நாகலாந்தின் இந்த முயற்சி மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது பல்வேறு நகரங்களும் பல்வேறு மாநிலங்களும் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளை அடிக்கடி சந்தித்து வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை 2018 முதல் 2022 ஆம் காலகட்டத்தில் மட்டும் இதுபோன்ற இயற்கை பேரிடர்களால் சுமார் 2,73,500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது போல காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது என்பது சிறந்த முடிவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications