இந்தியாவின் ஐடி தலைநகரமாக இருக்கக்கூடிய பெங்களூருவை மற்ற சாட்டிலைட் நகரங்களோடு இணைக்கக்கூடிய வகையில் நமோ பாரத் ரயில்களை இயக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து மொத்தம் நான்கு பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரயில் வழித்தடங்களை ஏற்படுத்தலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.
தர்மபுரி -பெங்களூரு இடையே நமோ பாரத் ரயில்: தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் என அழைக்கப்படும் என்சிஆர்டிசி , பெங்களூரு - ஹோஸ்கோடே - கோலார் பகுதிகளை இணைக்கும் வகையில் ஒரு வழித்தடம் , பெங்களூரு - மைசூர் இடையே வழித்தடம், பெங்களூரு - துமகுரு இடையே ஒரு வழித்தடம் , பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டை இணைக்க கூடிய வகையில் பெங்களூரு- ஓசூர் -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 138 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு வழி தடம் அமைக்கலாம் என பரிந்துரை வழங்கி இருக்கிறது.

நமோ பாரத் ரயிலின் நன்மைகள்: இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால் நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படும். இந்த பரிந்துரையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது பெங்களூரு- ஓசூர் -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வழித்தடம் ஆகும். பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதால் தமிழ்நாட்டின் ஓசூர் பிரம்மாண்டமான வளர்ச்சியை பெற்று வருகிறது. பெங்களூருவில் செலவுகள் அதிகமாக இருப்பதால் ஐடி ஊழியர்கள் பலரும் தங்களுடைய குடியிருப்புகளை ஓசூருக்கு மாற்றிவிட்டு தினம்தோறும் பெங்களூருவுக்கு சென்று வந்த வண்ணம் இருக்கின்றனர்.
வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: ஓசூரில் பல நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டிருப்பதற்கும் பெங்களூரு நகரம் அருகில் இருப்பது ஒரு காரணம் ஆகும். இது தவிர கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த பலருக்கும் தொழில் வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது பெங்களூரு. நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு வேலை நிமித்தமாக செல்கின்றனர்.
பயண நேரம் குறையும்: நமோ பாரத் திட்டம் நிறைவேற்றப்படும் போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு மிகப் பெரிய அளவிலான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். ஐடி ஊழியர்கள் ,மாணவர்கள், சிறு தொழில் முனைவோர் என பலரும் கடுமையான போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கர்நாடகாவிலேயே மைசூர் , துமக்குரு மற்றும் பெங்களூரு இடையிலான பயணம் என்பது சிக்கல் நிறைந்ததாகவே உள்ளது.’
வரப்பிரசாதமாக இருக்கும் ரயில் திட்டம்: நமோ பாரத் ரயில்கள் செயல்பாட்டுக்கு வரும்போது இவர்களின் பயண நேரம் குறையும் . எனவே தினந்தோறும் இந்த நகரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு நமோபாரத் திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இவர்களால் தங்களுடைய குடும்பத்தினரோடு கூடுதல் நேரத்தை செலவிட முடியும் அதேபோல தங்களுடைய படிப்பு மற்றும் தொழிலில் இன்னும் அதிக நேரம் கவனம் செலுத்த முடியும்.
செலவுகள் குறையும்: தினந்தோறும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு வேலைக்கு சென்று வருவதற்கு முடியாதென பலரும் பெங்களூரிலேயே தங்கும் விடுதிகள் அல்லது வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்கிறார்கள். அவர்கள் வாங்கக்கூடிய சம்பளத்தில் பெரும் பகுதி இந்த செலவுகளுக்கு சென்று விடும். நமோ பாரத் ரயில்கள் வந்துவிட்டால் இந்த மக்கள் தங்களுடைய சொந்த ஊரில் இருந்தே தினம்தோறும் பெங்களூருக்கு வேலைக்கு சென்று வருவது எளிதானதாக மாறும். இது அவர்களின் செலவினங்களை மேலும் குறைக்கும். அதுமட்டுமின்றி குடும்பத்தினரோடு அவர்கள் தினந்தோறும் தொடர்பில் இருப்பார்கள்.
தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு வளர்ச்சி: பெருநகரத்தோடு ஒரு சிறிய நகரத்தை இணைக்கும் போது பெருநகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்த சிறிய நகரமும் வளரும் அப்படி பெங்களூருடன் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளை நமோ பாரத் ரயில்கள் மூலம் இணைப்பதால் இந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக பின் தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நம்பிக்கையோடு தங்கள் பிள்ளைகளை குறிப்பாக பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கான ஒரு வாய்ப்பினை இந்த ரயில் இணைப்பு திட்டம் என்பது கொண்டு வரும்.
95 நிமிடங்களில் பயணம்: நமோ பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய திறன் கொண்டவை. பெங்களூரு- ஓசூர்- கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளை இணைக்கக்கூடிய ரயில் தடம் அமைக்கப்பட்டு நமோ பாரதி ரயில்கள் இயக்கப்படுகிறது என்றால் இது மொத்தம் 138 கிலோமீட்டர் நீளம் கொண்ட வழித்தடமாக இருக்கும். இதன் மூலம் தர்மபுரியில் இருந்து பெங்களூரு செல்வதற்கான நேரம் என்பது வெறும் 95 நிமிடங்களாக குறைந்துவிடும். பெங்களூர் மற்றும் தர்மபுரி இடையிலான பயண நேரம் ஒன்றரை மணி நேரங்களாக குறைந்து விடும். இது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பெரிய பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications