இந்தியாவில் செயல்படக்கூடிய ஐடி நிறுவனங்களில் திடீரென தலைமை மாற்றங்கள் ஏற்படும். அப்படி இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் தலைமை மாற்றம் ஏற்பட்டதால் மிகப் பெரிய பிரச்சனை உண்டான. நாராயணமூர்த்தி , நந்தன் நீலகேனி உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து தான் இன்போசிஸ் என்ற ஒரு நிறுவனத்தையே கட்டி எழுப்பினார்கள் .
இன்போசிஸ் நிறுவன தலைமை பொறுப்புகளும் மாறி மாறி இவர்கள் வசேம் இருந்தது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு திடீரென இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு தலைமை மாற்றம் ஏற்பட்டது. அதாவது இன்போசிஸ் நிறுவனத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் . அவர்தான் விஷால் சிக்கா. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பிஎச்டி முடித்தவர். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் புகழ்பெற்றவர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் படிப்படியாக மேல் வந்து உயர் பதவிக்கு பலரும் காத்திருந்த சூழலில் தான் திடீரென சிக்காவை தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்தனர். இது நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவர் முழுக்க முழுக்க அமெரிக்க ஐடி துறையில் இருந்து வந்தவர். சிக்கா இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்ற உடனே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சந்தையில் உயரத் தொடங்கியது .
விஷால் சிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிப்பது இன்போசிஸ் நிறுவனங்களுள் ஒருவரான நாராயணமூர்த்திக்கு துளியும் விருப்பமில்லை. நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு பதவிகளில் இருந்து விலகி இருந்தாரே தவிர நிறுவனம் தொடர்ந்து அவருடைய முடிவுகளையும் ஆலோசனைகளையும் கேட்டு தான் செயல்பட்டு வந்தது .ஏனெனில் இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் மிகவும் முக்கியமானவர் நாராயணமூர்த்தி. அவருக்கு விஷால் சிக்கா தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு விஷால் சிக்காவிற்கு இன்போசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு 17.38 கோடி ரூபாயை ஊதியமாக வழங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் இன்போசிஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரி என்ற பெருமை சிக்காவுக்கு கிடைத்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத நாராயணமூர்த்தி தலைமை செயல் அதிகாரி பதவிக்கு இவ்வளவு அதிக சம்பளம் வழங்குவதா என பொதுவெளியிலேயே விமர்சனம் செய்ய தொடங்கினார்.

இது இன்போசிஸ் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என வார்த்தை மோதல்களை தொடங்கினார். அந்த சூழலில் தான் 2015 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பனாயா என்ற நிறுவனத்தை 200 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. விஷால் சிக்கா தலைமையில் தான் இந்த பரிவர்த்தனை என்பது நடந்தது. ஆனால் குறைந்த மதிப்பு கொண்ட நிறுவனத்தை அதிக மதிப்பிற்கு விஷால் சிக்கா வாங்கிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு இழந்தது. எனவே நாராயண மூர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் வாரியக் குழு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதனால் கோபமடைந்த நாராயணமூர்த்தி இன்போசிஸ் வாரிய குழுவிற்கு மிக காட்டமான ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அதில் இன்போசிஸ் நிறுவனத்தின் அடிப்படை கொள்கையே வெளிப்படை தன்மை என்பது தான் ஆனால் அதுவே தற்போது இல்லை என அவர் கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார்.
இன்போசிஸ் வாரிய குழு உறுப்பினர்களுக்கும் நாராயணமூர்த்திக்கும் இடையிலான மோதல் பொதுவெளியில் வெளியாகி பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட விஷால் சிக்கா 2017 ஆகஸ்ட் மாதம் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். அப்போது அவர் வழங்கிய ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட முறையில் தன் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன இதன் காரணமாக என்னால் நிறுவனத்திற்காக முழுமையாக வேலை செய்ய முடியவில்லை எனக் கூறி இந்தியாவை வீட்டை வெளியேறினார்.
விஷால் சிக்கா வெளியேறியதை அடுத்து நிறுவனர்களுள் ஒருவரான நந்தன் நீலகேனி மீண்டும் இன்போசிஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். இன்போசிஸ் நிறுவனத்தில் பல தலைமை செயல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் விஷால் சிக்கா பதவி வகித்த காலம் இன்போசிஸ் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications