புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்காக..? அதன் அவசியம் என்ன..? - சூப்பர் வீடியோ..!!

இந்திய தலைநகராக இருக்கும் டெல்லியின் முக்கிய அடையாளமாக இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 இல் 'கவுன்சில் ஹவுஸ்' என வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் பலருக்கும் இடமில்லாமல் உள்ளது.

இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தில் 552 உறுப்பினர்கள் அமரலாம். லோக்சபாவில் 552 எம்.பி.க்கள் மற்றும் சென்டரல் ஹாலில் 436 பேர் அமரலாம். இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களின் போது, இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடத்தில் சுமார் 200 தற்காலிக இருக்கைகள் சேர்க்கப்படுவதால் பல்வேறு பாதுகாப்புக் கவலைகளை எழுப்புகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்காக..? அதன் அவசியம் என்ன..? - சூப்பர் வீடியோ..!!

இது மட்டும் அல்லாமல் 1927 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கட்டிடம் என்பதால் நில அதிர்வு மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முன்னிலையில் மிகவும் பின்தங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதற்கு மிகக் குறைந்த இடவசதி மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் பிரதமர் மோடி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். சுமார் 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டிடத்தை மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் ஜூன் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த சென்ட்ரல் விஸ்டா நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபா உட்புறங்களில் தேசிய பறவையான மயில்-ம் ராஜ்யசபா உட்புறங்களில் தேசிய மலர் தாமரை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முற்றத்தில் தேசிய மர ஆலமரம் கொண்டு இருக்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்காக..? அதன் அவசியம் என்ன..? - சூப்பர் வீடியோ..!!

புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு முக்கோண வடிவம் கொண்டது. இது லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டு முக்கிய அறைகளுடன் உள்ளது. சுமார் 65,000 சதுர மீட்டர் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு பச்சை மற்றும் ராஜ்யசபாவிற்கு மெரூன் நிறத்தில் பெயின்ட் பூசப்பட்டு உள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் சுமார் 888 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர முடியும், ராஜ்யசபா-வில் 384 எம்.பி.க்கள் அமர முடியும். இதன் மூலம் மக்களவையில் இரு அவை கூட்டம் நடைபெற எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவை பிரதமர் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+