எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் அதிகளவில் மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையிலும், சீன நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மலிவான கார்கள் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும் வேளையிலும், ஆட்டோமொபைல் துறையில் கொடிக்கட்டி பறந்த ஜப்பான் நிறுவனங்கள் தற்போது தரையை தட்டி தவழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதனால், உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. உலகின் முன்னணி இரண்டு கார் தயாரிப்பாளர்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை இதுநாள் வரையில் தனித்தனியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு ஆதிகாரம் செய்து வந்த நிலையில், தற்போது நிலைமை மோசமான காரணத்தால் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.

நிசான் மற்றும் ஹோண்டா பேச்சுவார்த்தையில் நிசான் கூட்டணி உறுப்பினரான மிட்சுபிஷி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் (Mitsubishi Motors Corp.) பங்கேற்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3 நிறுவனங்கள் ஒன்றாக இணையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இரு நிறுவனங்களும் லாபத்தில் கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஹோண்டாவின் நிகர லாபம் 19.7% குறைந்தது, அதேசமயம் நிசானின் நிகர லாபம் அதிர்ச்சியூட்டும் அளவில் 93.5% வீழ்ச்சியடைந்தது. இரு நிறுவனங்களின் லாப வீழ்ச்சி தற்காலிகமானத என்றாலும், நீண்ட கால அடிப்படையிலும் வர்த்தகம் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதை உணர்ந்துள்ளது.
நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் சமீப காலமாக சீனாவிலும், பிற வர்த்தக சந்தைகளிலும் அதிகளவிலான விற்பனை சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதேவேளையில் செலவுகளும் அதிகரித்து அடிப்படை அமைப்பையே ஆட்டிப்படைத்துள்ளது. வர்த்தகம் குறைந்தது வாயிலாக அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இதேவேளையில் சீனாவின் BYD, கிரேட் வால் மற்றும் நியோ போன்ற பிராண்டுகள் உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சீன நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத் திறன் மற்றும் குறைந்த செலவில் உற்பத்தியை செய்யும் கட்டமைப்பை வைத்து மலிவான விலையில் கார்களை அறிமுகம் செய்து இத்துறையில் கொடிக்கட்டி பறந்த பல நிறுவனங்களை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த போட்டியை சமாளிக்கவே நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி ஆகியவை ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக ஒரு முக்கிய கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணி மூலம் 3 நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன துறையில் உதிரிபாகங்களை பகிர்ந்து கொண்டு, ஆட்டோமேட்டெட் டிரைவிங் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்தன.
இந்த கூட்டணி தான் தற்போது இணைப்புக்கான வழிகளை உருவாக்கியது. 3 மாபெரும் பிராண்டுகள் இணைவது மூலம் தொழிற்சாலை, உற்பத்தி கட்டமைப்பு வளங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி, செலவுகளைக் குறைத்து, எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும் என நம்பும் காரணத்தால் இந்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
நிசான் மற்றும் ஹோண்டா இடையேயான முழுமையான இணைப்பு சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஆட்டோமொபைல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும். ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் நிச்சயமாக எலக்ட்ரிக் வாகனங்களாக இருந்தாலும், ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் கார்களை உருவாக்கும் பணியில் மிகவும் தீவிரமாக உள்ளது.
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் கார்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் எளிய வகையில் உருவாக்கப்பட்டால், எலக்ட்ரிக் வாகன பிரிவின் வளர்ச்சி தொய்வடையும், அதேபோல் பெட்ரோல், டீசல் கார்கள் மாயமாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications