சென்னை: இந்தியாவில் பண்டிகை காலம் என்றால் துணிமணி வாங்குவது என்பதை தாண்டி வீட்டு உபயோகப் பொருட்கள் , ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்டவற்றை வாங்கும் பழக்கமும் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது . இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிறுவனங்களும் பிராண்டுகளும் பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை தீபாவளி பண்டிகை என்றாலே பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கும் . எனவே மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் . மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவார்கள். ஈ காமர்ஸ் தளங்கள் நம்முடைய ஷாப்பிங்கை மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கின்றன. இவ்வாறு ஷாப்பிங் எளிமையாக்கப்பட்டிருக்கும் அதே வேளையில் நாம் கடனாளியாவதும் எளிமையானதாக மாறியிருக்கிறது.

பல்வேறு நிறுவனங்களும் பெரும்பாலான பொருட்களை இஎம்ஐ மூலம் வாங்கும் வாய்ப்பை தருகின்றன. அதாவது முதலில் பொருட்களை வாங்குவது பின்னர் படிப்படியாக அதற்கான பணத்தை செலுத்துவது என்பதுதான் இந்த இஎம்ஐ மூலம் நமது கிடைக்க கூடிய சலுகை . இதில் முக்கியமானது நோ காஸ்ட் இஎம்ஐ. அதாவது இதில் நாம் பொருளுக்கான விலையை மட்டுமே மாதம் தோறும் பிரித்து செலுத்துவோம் , வட்டி செலுத்த தேவையில்லை.
பெரும்பாலான நபர்கள் நோ காஸ்ட் இஎம்ஐ-களுக்கு பின்னால் இருக்கக்கூடிய நிறுவனங்களின் தந்திரத்தை அறியாமல் அவற்றை பயன்படுத்தி பொருட்களை வாங்குகிறார்கள். சிஏ நிதின் கவுசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில் அமேசான் பிரைம் சேல்ஸில் 25 சதவீதம் விற்பனை இஎம்ஐ மூலமாகத்தான் நடந்திருக்கிறது அதில் 90 சதவீதம் நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் வாங்கப்பட்டுள்ளது என கூறுகிறார்.
உதாரணமாக ஒரு நபர் 1.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்பை நோ காஸ்ட் இஎம்ஐ முறையில் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அந்த வங்கி அவருக்கு ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாய் இஎம்ஐ-ஆக செலுத்தினால் போதும் என சலுகை வழங்குகிறது. அந்த நபr நினைத்துக் கொள்கிறார் நமக்கு வட்டி இல்லை வாங்கிய லேப்டாப்பிற்கான தொகை மட்டுமே நம் திரும்ப செலுத்துகிறோம் என , ஆனால் அவருக்கு இந்த ரசீது வரும் போது தான் அதில் வட்டி என்ற ஒரு பிரிவு இருக்கும் என்கிறார்.
வங்கி தரப்பில் லேப்டாப்பின் விலை என்பது அசல் விலை மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் கூட்டி தான் உங்களுக்கு காண்பிக்கும் என கூறுகிறார். அதாவது கிட்டதட்ட 15லிருந்து 20 சதவீதம் அந்த தள்ளுபடியோடு ஒருங்கிணைக்கப்பட்டு உங்களுக்கு கட்டணமாக காட்டுமாம். பேப்பரில் உங்களுக்கு வட்டி இல்லை என்பது போல தோன்றினாலும் உண்மையில் உங்களுக்கு வட்டி இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்: சிறிய முதலீட்டில் பெரிய கனவுகளை நனவாக்கும் ரகசியம் - விவரங்கள் இங்கே!
உதாரணமாக பொருளின் விலை, அதற்கான வட்டி , வட்டிக்கான ஜிஎஸ்டி, செயலாக்க கட்டணம் ஆகிய அனைத்தும் சேர்ந்து தான் பொருளின் மொத்த விலையாக காட்டுவார்கள் என்கிறார். லேப்டாப் வாங்கிய கணக்கை பார்க்கும்போது அதில் 3500 ரூபாய் வட்டி 118 ரூபாய் ப்ராசசிங் கட்டணம் ஆகியவற்றை சேர்த்து லேப்டாப்பின் மொத்த விலை 1,23,718 ரூபாய் . அதில் அவருக்கு எட்டாயிரம் ரூபாய் தள்ளுபடி என அறிவித்திருப்பார்கள் ஆனால் அந்த 8000 ரூபாயில் உண்மையான தள்ளுபடி 4000 ரூபாய் மட்டுமே மீதமுள்ள நான்காயிரம் ரூபாய் இந்த இஎம்ஐ உள்ளிட்டவற்றுக்கு சென்று இருக்கும் என்கிறார்.
1.2 லட்சம் மதிப்பிலான லேப்டாப்பிற்கு நீங்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் போதும் என்று தான் நிறுவனங்கள் உங்கள் மனதில் விதைக்கின்றன . ஆனால் உண்மையில் அதில் வட்டி மறைமுகமாக இணைக்கப்பட்டிருக்கும் என்கிறார். லேப்டாப்பின் விலையே 1,20,000 தான் ஆனால் உங்களுக்கு மொத்தவிலை 1,28,718 ரூபாய் என காட்டி இருப்பார்கள் என்கிறார்.
ஒரு பொருளை வாங்கும் போது மொத்தமாக பணம் கொடுத்து அந்த பொருளை வாங்கும்போது என்ன விலை, இஎம்ஐ முறையில் விலை என்ன, நோ காஸ்ட் இஎம்ஐ என்றால் நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள் என்பதை கணக்கிட வேண்டும் என கூறுகிறார்.நிறுவனங்கள் மிக எளிமையாக நம்மை இன்ஃப்ளூயன்ஸ் செய்து பொருட்களை வாங்க வைத்து விடுகின்றன , அதன் பின்னர் அடுத்த பண்டிகை வரும் வரை நாம் அதற்கான கடனை தான் திரும்ப செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறிவிடுகிறோம் என கூறுகிறார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications