மத்திய கிழக்கு பகுதியில் ஜூன் மாதத்தில் தினமும் ஏவுகணைகள் பறந்து அப்பகுதி மக்களின் தூக்கத்தை தொலைத்தது. இது மட்டும் அல்லாமல் இஸ்ரேல் நாட்டின் தாக்குதல் காரணமாக ஈரான் நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தப்படாமல் நின்றது பலருக்கும் தெரியும். இதோடு உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்யப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்படும் அபாயத்தில் இருந்தது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரும் என்று உலகமே எதிர்பார்த்தது. இந்த சூழ்நிலையில் கணிக்கப்பட்டப்படியே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் 80 டாலர்களை தாண்டியது, ஆனால் சில நாட்களில் 65 டாலர்களுக்கு கீழே சரிந்தது. இது தான் தற்போது பலரையும் ஆச்சிரியத்திலும், குழப்பத்திலும் தள்ளியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 0.13 சதவீதம் அதிகரித்து 68,54 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும், ஈரானில் இன்னும் போர் அச்சம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையிலும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் விலை குறைந்து நிலையாக உள்ளது. இந்த முரண்பாட்டுக்கு முக்கியமான காரணம், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம் தான்.
ஈரான் நாட்டில் ஏற்பட்டு உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பை பயன்படுத்தி பிற நாடுகள் கூடுதலாக உற்பத்தி செய்தி சந்தைக்கு கொண்டு வந்து வருமானத்தை அள்ளியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வந்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றம்:
உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் குறைந்த நிலையில் பல நாடுகள் தங்களது உற்பத்தியை அதிகரித்துள்ளது, இதில் முக்கியமாக அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி, விரைவாக தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க அளவில் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது. இது, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.
இரண்டாவதாக, ஓபெக்+ நாடுகள் மத்தியில் ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் பிரச்சனை இருந்தபோதிலும், ஈரான் பிரச்சனையை பயன்படுத்திக்கொள்ள சில நாடுகள் முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா போன்ற முக்கிய OPEC+ உற்பத்தி நாடுகள் தங்கள் உற்பத்தி அளவை உயர்த்தியுள்ளன.
மேலும், ஓபெக் அமைப்பில் அல்லாத சில நாடுகளும் இக்காலக்கட்டத்தில் தனது கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது மூலம் ஈரான் இழப்பை ஈடு செய்தது மட்டும் அல்லாமல் உபரி எண்ணெய்யை சந்தைக்கு கொண்டு வந்தது மூலம் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இந்தியாவுக்கு நன்மை:
இஸ்ரேல் - ஈரான் மோதலால் எண்ணெய் விலைகள் உயரும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் இந்த கணிப்பை உடைக்கும் வகையில் தற்போது சந்தை நிலவரங்கள் உள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள இந்த மந்தநிலை இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலை என்பது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகளை பெரிதும் சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும். இது நாட்டின் பணவீக்க அளவுக்கை கட்டுக்குள் வைக்கும். குறிப்பாக உற்பத்தி செலவுகளை குறைத்து பொருட்களின் விலையை குறைக்கும்.
இந்தியா, 2024-இல் தனது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 35% ரஷ்யாவிலிருந்து பெற்றது. ரஷ்யா தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் காரணத்தால் இந்தியாவுக்கு மலிவான விலையில் கிடைக்கிறது.
More From GoodReturns

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!



Click it and Unblock the Notifications