டெல்லி: நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் மட்டும் ஏன் ஒரு நாள் முன்னதாகவே சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? அதற்கான விடையை தான் இந்த கட்டுரையில் நாம் காண போகிறோம்.
1947 ஜூலை 18ஆம் தேதி இந்திய சுதந்திர சட்டம் 1947 நிறுவப்பட்டது. 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டு சுதந்திர நாடுகள் இந்தியாவில் உருவாகும் ஒன்று இந்தியா என்றும் மற்றொன்று பாகிஸ்தான் என்றும் அறியப்படும் என இந்த சட்டம் கூறுகிறது. இப்படி ஒரே தேதியில் சுதந்திரம் பெற்ற இரண்டு நாடுகள் ஏன் அடுத்தடுத்த தினங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன என்பதன் பின்னணியில் சுவாரஸ்யமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகவும் பிரிட்டன்ம் அரசின் ஆட்சி பிரதிநிதியாகவும் அப்போது இருந்தவர் மவுண்ட்பேட்டன். இவர் தான் இரு நாடுகளிலும் அதிகார மாற்றத்தை கொண்டு வந்தவர். 1948க்கு முன் அதிகார மாற்றம் நிகழ வேண்டும் என முடிவு செய்த போது, அதனை விரைவுபடுத்தி 1947இல் குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதியே சுதந்திரம் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தவர் மவுண்ட்பேட்டன்.
எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மவுண்ட் பேட்டன் ஒரே சமயத்தில் இரு நாடுகளுக்கும் அதிகார மாற்றத்தை வழங்க முடியாது. முதலில் இந்தியாவில் அதிகார மாற்றம் நிகழ்ந்தால் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னல் ஜெனரல் ஆகிவிடுவார். எனவே தான் அவர் முதலில் கராச்சிக்கு சென்று அதாவது ஆகஸ்ட் 14 1947 அன்று கராச்சிக்கு சென்று முகமது அலி ஜின்னாவை சந்தித்து, அதிகாரத்தை மாற்றி அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்தியா வந்த மவுண்ட்பேட்டன் நள்ளிரவில் அதிகார மாற்றம் செய்தாராம்.
எனவே முதலில் பாகிஸ்தான் தலைவர்களும் , மக்களும் ஆகஸ்ட் 15ஆம் தேதியை தான் சுதந்திர தினமாக கொண்டாடினர். இந்நிலையில் தான் 1948இல் பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான், அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அப்போது சுதந்திர தினம் கொண்டாட்டம் தொடர்பாக பேச்சுகள் எழவே.
அமைச்சர்கள் இந்தியாவுக்கு முன்னதாக பாகிஸ்தான் தனது சுதந்திரத்தை கொண்டாட வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஜின்னாவுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதலின் பேரில் ஆகஸ்ட் 14 சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டு 1948 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையின் முக்கிய நாளான 27ஆவது நாளுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒத்து போனதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய சுதந்திர சட்டம் 1947ஐ பொறுத்தவரை ஆகஸ்ட் 15 தான் பாகிஸ்தான் சுதந்திர தினம், அந்த நாளில் அந்நாட்டின் முதல் அமைச்சரவை பதவியேற்பு, சுதந்திர தினம் அஞ்சல் தலை வெளியீடு ஆகியவை நடந்தன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஆட்சியாளர்கள் பல காரணங்களை முன் வைத்து 14ஆம் தேதியை சுதந்திர தினமாக அறிவித்து கொண்டாடுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications