உலக அளவில் ஏஐ தொழில்நுட்பத்தில் தான் தற்போது பெரிய போட்டி நடந்து வருகிறது. கூகுள், ஓபன் ஏஐ, பெர்பிளெக்சிட்டி போன்ற அமெரிக்க நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன.
அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் அண்மை காலமாக இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக ஏஐ வசதிகளை வழங்குகின்றன. முதலில் பெர்பிளெக்சிட்டி நிறுவனம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓராண்டு காலத்திற்கு தங்களின் பிரிமியம் சேவை இலவசம் என அறிவித்தது. இதனை அடுத்து நிறுவனம் நவம்பர் நான்காம் தேதியிலிருந்து அனைத்து இந்திய பயனாளர்களுக்கும் சாட் ஜிபிடி கோ சேவை ஓராண்டு காலத்திற்கு இலவசம் என ஓபன் ஏஐ அறிவித்தது.

கூகுள் நிறுவனம் ஜியோவோடு கூட்டமைப்பு செய்து ஜெமினியின் பிரீமியம் சேவைகளை ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது . இப்படி ஏஐ நிறுவனங்கள் அனைத்தும் இந்திய பயனாளர்களுக்கு போட்டி போட்டு கொண்டு இலவசமாக தங்களுடைய ப்ரீமியம் சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் பின்னணியில் இருக்கின்றன. அது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது கட்டாயம்.
இந்தியர்களை பொறுத்தவரை மிக வேகமாக டிஜிட்டல் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை பயன்படுத்தக்கூடிய நபர்கள். எனவே ஏஐ சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய ஒரு சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடமும் தங்களுடைய செல்போன்களில் இந்த செயலிகளை பயன்படுத்துகிறார்கள்.

அது மட்டும் இன்றி இந்தியா மிகப்பெரிய அளவில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, பல்வேறு திறமைகள் கொண்ட , பல்வேறு பாரம்பரியம் கொண்ட ஒரு நாடு. ஏஐ நிறுவனங்களை பொறுத்தவரை இது போன்ற தரவுகளை கொண்டு தங்களுடைய மாடல்களை டிரெய்னிங் செய்வது என்பது அவர்களுக்கு தங்கம் கிடைத்தது போன்ற ஒன்று . அதாவது பல தரப்பட்ட மக்களின் தரவுகளை பெற்று தங்களுடைய லாங்குவேஜ் மாடல்களை அதற்கு ஏற்ப மெருகேற்றுவதற்கு தங்களுடைய பயனர்கள் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இதன் காரணமாகவே ஏஐ நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக தங்களின் பிரீமியம் சேவைகளை வழங்கி இருக்கின்றன. அதே வேளையில் ஏஐ கருவிகள் பயன்பாட்டில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த சந்தை இன்னும் விரிவடையும். எனவே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப லாங்குவேஜ் மாடல்களை மேம்படுத்த இந்தியர்களின் தகவல்கள் அவசியம்.
இந்தியர்களிடம் பிரீமியம் ஏஐ சேவைகளை பெறுவதற்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டும் எனக் கூறினால் நிச்சயம் அவற்றை பயன்படுத்த முன்வர மாட்டார்கள். இதுவே இலவசம் என கொடுத்தால் கோடிக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்த தொடங்குவார்கள். ஏஐ நிறுவனங்களை பொறுத்தவரை அவற்றின் செயலிகளை பயன்படுத்தக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த இலவச சேவை மூலம் கோடி கணக்கான மக்களின் தரவுகளை இலவசமாகவே அணுக முடியும் .
இது தங்களுடைய ஏஐ மாடல்களை மேம்படுத்துவதற்கு இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். அதாவது இலவசம் என்ற ஒற்றை வார்த்தை மூலம் நம்மை அவர்களின் செயலிகளை பயன்படுத்த செய்துவிட்டு நம்முடைய தரவுகளை அவர்கள் இலவசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இதன் பின்னர் ஸ்மார்ட்டான ஒரு மார்க்கெட்டிங் உத்தியும் உள்ளது.
ஓராண்டு காலத்திற்கு நாம் ஜெமினி ஏஐ, சாட் ஜிபிடி போன்ற செயலிகளின் பிரீமியம் சேவைகளை பயன்படுத்திவிட்டு திடீரென அவை இல்லை எனும் போது எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தி அவற்றை பயன்படுத்த தயாராக இருப்போம். அந்த சமயத்தில் ந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பணம் செலுத்தினால் அது அந்த நிறுவனங்களுக்கு பெரிய வருவாய் பெற்று தரும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications