கார்ப்பரேட்களுக்கு ஜிலுஜலு வாழ்க்கை.. சாமானிய மக்கள் தான் பாவம்.. வரி வசூலில் பெரும் வித்தியாசம்..!!

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தும் வரியை விட தனி நபர்கள் செலுத்தக்கூடிய வருமான வரி அதிகமாக இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, மத்திய அரசு சாமானிய மக்களிடம் இருந்து அதிகப்படியான வரியை வருமானமாக பெறுகிறது. இது தொடர்பாக இந்தியா டுடே முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் தான் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்தது. அந்த ஆண்டில் அதாவது 2019 - 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்திய வரி 5.56 லட்சம் கோடி ரூபாய். அந்த சமயத்தில் தனி நபர்கள் செலுத்திய வருமான வரி அளவு 4.92 லட்சம் கோடி ரூபாய்.

கார்ப்பரேட்களுக்கு ஜிலுஜலு வாழ்க்கை.. சாமானிய மக்கள் தான் பாவம்.. வரி வசூலில் பெரும் வித்தியாசம்..!!

அதுவே 2022 -23 ஆம் ஆண்டில் தனி நபர்கள் செலுத்திய வருமான வரியின் அளவு 10.22 லட்சம் கோடி என உயர்ந்துவிட்டது, கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்திய வரியின் அளவு 9.22 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது.

2024 ஆம் ஆண்டில் தனிநபர் செலுத்தக்கூடிய மொத்த வருமான வரி 11.56 லட்சம் கோடி ஆகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தக்கூடிய வரியின் அளவு 10.42 லட்சம் கோடி ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அரசு வரிச் சலுகைகளை வழங்கிய பின்னர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சுமை குறைந்து சாமானிய மக்கள் மீது அது விழுந்துவிட்டது. நாட்டின் ஜிடிபியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்க என்ற நோக்கத்திலும் தான் மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்தது. ஆனால் உண்மையில் அந்த நோக்கம் நிறைவேறியதா என்ற கேள்வி இத்தரவுகளை பார்க்கும் போது அனைவருக்கும் எழுந்துள்ளது.

இந்தியாவில் குறிப்பிட்ட 6 துறைகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களின் லாபம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கேற்ப அந்த நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவில்லை.

இது தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், BFSI பிரிவில் 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஊழியர்களுக்கு 2.8% மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. FMCGஇல் 5.4%, ஐடி பிரிவில் 4%, லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 4.2%, ரீடெய்ல் பிரிவில் 3.7% என உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணவீக்க விகிதம் சராசரியாக 6% என இருக்கும் போது எந்த தனியார் துறையும் அதற்கு நிகராக கூட ஊதியத்தை உயர்த்தவில்லை. அதே வேளையில் இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் இந்த நிறுவனங்கள் உருவாக்கவில்லை. தனியார் நிறுவனங்களின் பங்கு லாபமாக மூலதனத்துக்குச் செல்வதற்கும், ஊதியமாக தொழிலாளர்களுக்குச் செல்வதற்கும் இடையில் சமநிலை இல்லை என்பதே தற்போதுள்ள குற்றச்சாட்டு.

தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரம் சரிவடைந்து வரும் வேளையிலும் அரசு கார்ப்பரேட் வரியை உயர்த்தாமல் தொடர்ந்து வரி சுமையை தனி நபர்களின் மீது சுமத்துவது சரியல்ல என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. ஒருபுறம் வரிச்சலுகையை அனுபவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை தாங்கள் மட்டுமே அனுபவிக்கின்றன, அதை ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்கவில்லை, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை.

அப்படி இருக்கும் போது 2019ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் வரி சலுகைகளை அரசு பரிசீலனை செய்து வரி கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+