மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (excise duty) குறைத்துள்ளது. பொதுவாக இத்தகைய நடவடிக்கை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும். ஆனால் தற்போதைய சூழலில், இந்த வரி குறைப்பு உடனடியாக ரீடைல் சந்தையில் விலை குறைப்பை ஏற்படுத்தாது என்பதே நிபுணர்களின் மதிப்பீடாக உள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, பெட்ரோலுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாய் அளவில் இருந்த நிலையில் இது 3 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கான இந்த சிறப்பு கலால் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுமே தலா 10 ரூபாய் வரை வரி சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. (பெட்ரோல் விலை : டீசல் விலை)

இந்த அறிவிப்பு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நேரத்தில் வந்துள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைப்பின் முக்கிய நோக்கம், பொதுமக்களுக்கு நேரடி சலுகை வழங்குவது அல்ல. மாறாக, எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்த்துவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
கடந்த 4 வாரங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், Oil Marketing Companies (OMCs) அதிக செலவுகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன. இந்த கூடுதல் செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலை உருவானால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை தவிர்க்க, மத்திய அரசு வரியை குறைத்து, விலையை தற்போதைய நிலையில் வைத்திருக்க தேவையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் கலால் வரி குறைப்பு வாயிலாக லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பு ரீடைல் விலைக்கு எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் இழப்பை குறைக்கும் ஒரு நடவடிக்கை.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 149 டாலர் அளவில் இந்தியா வாங்கி வருகிறது. இந்த உயர்வு, இந்தியாவில் எரிபொருள் உற்பத்தி செலவை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வரி குறைப்பு இல்லாமல் இருந்தால், எரிபொருள் விலை உடனடியாக உயர்ந்திருக்கும். அதாவது, தற்போதை கலால் வரி குறைப்பு நடவடிக்கை பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக அல்ல, அதிகரிப்பை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் இந்த கலால் வரி குறைப்புக்கு முன்பே, தனியார் எரிபொருள் விற்பனையாளர் Nayara Energy, பெட்ரோல் விலையை ரூ.5 மற்றும் டீசல் விலையை ரூ.3 உயர்த்தியுள்ளது. இது சந்தையில் ஏற்கனவே விலை உயர்வு அழுத்தம் உருவாகி இருப்பதை காட்டுகிறது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதாக வந்த செய்திக்கு இந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இப்படி தனியார் நிறுவனங்கள் மத்தியிலும் நெருக்கடி உருவாக்கியுள்ளது.
மக்களுக்கு என்ன பொருள்?
இந்த முடிவின் விளைவாக, பொதுமக்கள் உடனடி விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது. அதிகபட்சமாக, தற்போதைய விலைகள் நிலைத்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் அல்லது சர்வதேச பதற்றம் நீடித்தால், எதிர்காலத்தில் மீண்டும் விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.
மத்திய அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கை, வெளிப்படையாக சலுகையாக தோன்றினாலும், உண்மையில் இது எரிபொருள் சந்தையை பாதிப்பிற்குள் தள்ளாமல் காப்பாற்றும் ஒரு தற்காலிக தீர்வு.
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications